வேலூர் தேர்தல்; வெப்கேமரா கண்காணிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல்; வெப்கேமரா கண்காணிப்பு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (3)
Share
வேலுார் தேர்தல், வெப்கேமரா கண்காணிப்பு, சத்யபிரதா சாகு

சென்னை : வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலில் 850 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''ஜுலை 18ம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெணி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது.

வேலூரில் மொத்தம் உள்ள 1553 வாக்குச்சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். 179 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2கோடியே 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 89 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X