சந்திரயான் ரெண்டு: அரசியல் உண்டு

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இதற்கு தொலைநோக்கு பார்வையுடன் விண்வெளி ஆய்விற்காக 1962 ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நிதி ஒதுக்கியது தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதற்காக இஸ்ரோ

புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இதற்கு தொலைநோக்கு பார்வையுடன் விண்வெளி ஆய்விற்காக 1962 ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நிதி ஒதுக்கியது தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.latest tamil news


நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பா.ஜ., தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டு, இந்திய தேசியக்கொடியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வரலாற்று திட்டம் என குறிப்பிட்டிருந்தது.


latest tamil news


அதே சமயம் காங்., வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் முதல் பிரதமரான தொலைநோக்கு பார்வையை நினைவில் கொள்ள வேண்டிய நல்ல சமயம் இது. 1962 ல் விண்வெளி ஆய்விற்காக INCOSPAR விற்கு நிதி ஒதுக்கியது தான் பின்னாளில் இஸ்ரோ ஆனது. அத்துடன் 2008 ல் மன்மோகன் சிங் சந்திரயான் 2 திட்டத்திற்காக நிதி ஒதுக்கினார் என குறிப்பிட்டிருந்தது.
இது பற்றி கருத்து தெரிவித்த சில பாஜ தலைவர்கள், ‛‛சந்திரயான் 2 வெற்றிக்கு வாழ்த்து கூறாமல் இதிலும் அரசியல் செய்கிறது காங்., ''என்று கூறி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
23-ஜூலை-201905:44:47 IST Report Abuse
Nathan வாயில கட்ட விரலை சூபிண்டே , அலங்கார வீட்டை பார்த்து இது எங்க வீட்ல அன்னிக்கே பண்ண நெனச்சுதுன்னு தெரு ஓர பொண்ணு சொல்றா மாதிரி உப்பா சப்பனிங்க ஊர கெடுத்ததுமில்லாம இந்திய பணத்துல பார்ட்டிகல் அடிச்ச நேரு மாமனுக்கு தூக்கல் வேறே .
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
23-ஜூலை-201903:52:02 IST Report Abuse
B.s. Pillai Heart felt congrates to ISRO Team. When the whole world is celebrating 50 years of the landing in the Moon by USA NASA, we, the Indians ,and ISRO is silently achieving ,which even NASA failed miserably, i.e. successful launching of Mars and now we are attempting to land in the other side (Darker side of the moon ) which not even NASA TRIED EVER. We , the Indians , prove to be superior, in spite of many obstacles and with many other interference from other super powers. The time is not far when India will be one of the super power. The dream of APJ will come true in a very short period. One more thing , when we remember APJ, the painful thought also comes to the forefront that it was the Congress and its leader Soniya and DMK leader, Mr.(Late ) MK , were responsible for APJ not becoming the President of India, a second time. This back stabbing was the achievement of Congresls for the Rocket Technology leader APJ.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201923:08:07 IST Report Abuse
Rajagopal நேரு, லால் பஹாதுர் சாஸ்திரி, படேல், காமராஜர் போன்றவர்களை அரசியல்வாதிகள் என்று சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே இந்தியாவின் வளமான எதிர்காலத்தைக் கனவு கண்டத் தியாகிகள். இவர்கள் எவரையும் எந்த ஊழலிலும் இணைக்க முடியாது. இன்றைய அரசியல் கண்ணோட்டத்தை வைத்து அந்தக் காலத்துத் தலைவர்களை பாகு படுத்திப் பார்ப்பதுத் தவறானது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள். நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள். தியாகம் செய்தவர்கள். நேரு நாட்டுக்காக விதைத்தப் பல விதைகள் இன்று வளர்ந்து நாட்டுக்குப் பெருமை தரும் வகையில் உயர்ந்திருக்கின்றன. இஸ்ரோவும் அதில் ஒன்று. அதை இன்றைய பாஜகவும், காங்கிரசும் அரசியல் கூறு போடுவது சரியில்லை. நேருவின் கண்ணோட்டம் அப்போது வேறாக இருந்தது. இன்றையக் கண்ணோட்டம் வேறு. ஆனால் நேரு நாட்டுக்காக உழைத்தவர். அவரது பலத் திட்டங்கள் வளராமல் போனாலும், சில வளர்ந்து இன்று நமக்குத் பெருமை தருகின்றன. இந்திராவின் காலத்தில்தான் ஊழல் சாம்ராச்சியம் பிறந்து வளர்ந்தது நாடெங்கிலும். இருக்கும் காங்கிரஸ், சுதந்திர போராட்டத்தில் பாடு பட்டக் காங்கிரஸ் அல்ல. இந்திரா, காந்தியின் பெயரையும், காங்கிரசின் பெயரையும் தனக்கு சாதகமாக மாற்றி வைத்துக் கொண்டுப் பலன் அடைந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X