பொது செய்தி

இந்தியா

ஐஎம்எப்., தலைவர் பதவியை கேட்கிறாரா ரகுராம் ராஜன்?

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப் ) தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் முன்னணியில் இருப்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயர் தான்.

ஐஎம்எப்., தலைவராக இருந்த கிறிஸ்டைன் லகர்டே, ஐரோப்பிய வங்கி தலைவராக ஐரோப்பிய கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஐஎம்எப்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடர்ந்த வாரம் அறிவித்தார்.

இதனால் 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து அனுபவம் பெற்ற ரகுராம் ராஜனின் பெயர் அனைவரின் நினைவிலும் வந்தது. முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவரான ரகுராம், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார். பா.ஜ., அரசின் கொள்கைகளால், பிரதமர் மோடியுடன் அவருக்கு பல பிரச்னைகள் எழுந்தது.
ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் பிரதமர் மோடி அவரை பாராட்டினாலும், அவரை மீண்டும் அதே பதவிக்கு கொண்டு வர இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

இங்கிலாந்து வங்கியின் அடுத்த கவர்னராக ராஜன் நியமிக்கப்படுவார் என பிரிட்டன் மீடியாக்கள் குறிப்பிட்டன. 53 வயதாகும் ராஜன், தற்போது சிகாகோ பல்கலை., பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.

இருந்தாலும், இங்கிலாந்து வங்கி தலைவர் பதவி மிகவும் அரசியல் நிறைந்தது என கூறி ராஜன் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் பிசிசி.,க்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய வங்கி தலைவர் பதவி சமீப காலமாக அரசியல் நிறைந்ததாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால், நாட்டின் அரசியல் நிலையை புரிந்து கொண்டு, அதை எப்படி கையாள்வது என தெரிந்த வேறு ஒருவரை, நாட்டுக்குள் இருக்கும் ஒருவருக்கு அந்த பதவியை அளிப்பது தான் சிறந்தது.ஐஎம்எப் தலைவருக்கு ராஜன் பெயர் வந்தது எப்படி?


ஐஎம்எப்., அடுத்த தலைவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேராதவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததே இதற்கு காரணம்.

சந்தை நிலவரம் குறித்து நன்கு அறிந்த ஒருவரை தலைவராக தேர்வு செய்ய இதுவே சரியான தருணம். முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் என்ற முறையில் ராஜன், ஐஎம்எப்.,ன் நன்மதிப்பை பெற்றார். அதே சமயம், இங்கிலாந்து வங்கி கவர்னர் பதவிக்காலம் முடிய உள்ள மார்க் கார்னியும் ஐஎம்எப்.,ல் ராஜனின் பங்கை கருத்தில் கொண்டு அவரின் பெயரை முன்மொழிந்துள்ளார். அத்துடன் டேவிட் கேமரூன் அரசில் இருந்த முன்னாள் தலைவர் ஜார்ஜ் ஆஸ்போர்ன், டச்சு முன்னா நிதியமைச்சர் ஜிரோயின் டிஜிஸ்சல்புளோயிம் ஆகியோரும் ராஜனின் பெயரை முன் மொழிந்தனர். ஜிரோயின் டிஜிஸ்சல்புளோயிம், ஐரோப்பா நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த போது நிதியமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தவர்.ஐஎம்எப் மிக முக்கியம் ஏன் ?


ஐஎம்எப் என்பது உலக பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மையை முன்னிறுத்துவதுடன், சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்து ஏழ்மையை குறைக்கும் சர்வதேச அமைப்பாகும்.வாஷிங்டனின் அமைந்துள்ள இதில் தற்போது 189 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இதிலுள்ள ஒவ்வொரு நாடும், தங்களின் நிதி முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஐஎம்எப்.,ன் செயற்குழுவில் பிரதிநிதிகளாக உள்ளன. அதனால் தான் உலக பொருளாதாரத்தில் சக்திவாய்ந்த நாடுகள் ஐஎம்எப்.,ல் ஓட்டளிக்கும் வலிமையை பெற்றுள்ளன.பொருளாதார நெருக்கடியை தடுக்கவோ அல்லது நிதி பிரச்னையை குறைக்கவோ நாடுகளுக்கு கடன் வழங்குவது இந்த ஐஎம்எப்., தான்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
22-ஜூலை-201922:23:59 IST Report Abuse
Jegan Nicholas பா. சி க்கு நெருக்கமானவர் இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை , ஒரு திருடனின் சேவைதான் இங்கிலாந்துக்கு எப்போதும் தேவை
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
23-ஜூலை-201905:54:02 IST Report Abuse
Anandanஇப்படி சொல்லி இவரை விரட்டி விட்டு இன்னொருவரை கொண்டு வந்தீங்க அவரும் கிளம்பிவிட்டார். உங்களுக்கு தோதாக வெறும் பொருளாதாரத்தில் MA பிடித்தவரை வைத்து காலத்தை ஓட்டுறீங்க. உங்க ஆளுங்களுக்கு தேவை தலையாட்டி பொம்மைகள். ரகுராம் ராஜன் சென்றபின் பொருளாதாரம் ஒன்றும் உயரவே இல்லையே ஏன்?...
Rate this:
Share this comment
rishya - Karaikal,இந்தியா
23-ஜூலை-201913:36:57 IST Report Abuse
rishyaதற்போதைய கவர்னர் எம்.ஏ. வரலாறு படித்தவர்...
Rate this:
Share this comment
rishya - Karaikal,இந்தியா
23-ஜூலை-201913:45:54 IST Report Abuse
rishyaபடித்தது எம் ஏ வரலாறு...
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-201921:35:41 IST Report Abuse
Thiagu தமிழன் வந்தால் நல்லது, சூசைக்கும் அந்த செட்டிக்கும் நெறய சொத்து இருக்குதாம் அங்க, மூர்க்கனுக்கு அங்க கொஞ்சல் தான், கொண்டாட்டம் தான், தின்ற சோறு நமது கொண்டாடுவது எதிரிகளை இது தான் மூர்க்கம் மற்றும் தமிழ் துரோகிகள்
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201921:15:51 IST Report Abuse
chakra நிர்மலாவை இந்த பதவிக்கு நியமிக்கலாமே
Rate this:
Share this comment
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201923:20:41 IST Report Abuse
chakraஊறுகாய் வித்தவங்களை சேர்த்துப்பாங்களா...
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-ஜூலை-201903:19:28 IST Report Abuse
BoochiMarunthuஉலகம் அழியினும்னா போடலாம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X