ஆர்.டி.ஐ., சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (13)
Advertisement
ஆர்.டி.ஐ., சட்ட திருத்தம், மசோதா, லோக்சபா

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும், சட்ட திருத்த வரைவு மசோதா, கடந்த 19-ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பான தகவல் ஆணையரின் அதிகாரத்தை பறிக்கும் இம்மசோதாவை திரும்ப பெற வேண்டும் என அவையில் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ''சட்ட திருத்தப்படி, மத்திய மற்றும் மாநில, மனித தகவல் ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கவும், ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் ஒப்படைக்கப்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்யும். தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும். எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Marappan - erode,இந்தியா
23-ஜூலை-201910:10:33 IST Report Abuse
Subramanian Marappan ஒரு தனிப்பட்ட பதவியின் காலத்தையும் ஊதியத்தையும் குறைப்பது மற்றும் அந்த பதவிக்கு தகுதியானவரை நியமிப்பது எவ்வாறு RTI சட்டத்தை பாதிப்படைய செய்யும்?
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
23-ஜூலை-201909:10:30 IST Report Abuse
Suri வெளிப்படை தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் இப்படிப்பட்ட நல்ல சட்டங்களை மேலும் வலுவானதாக்க முயற்சி எடுக்காமல் நீர்த்துப்போக வைப்பதன் மர்மம் என்ன??
Rate this:
Share this comment
Cancel
Saminathan Kayarohanam - Trichy,இந்தியா
23-ஜூலை-201906:15:34 IST Report Abuse
Saminathan Kayarohanam தகவல் அறியும் உரிமை சட்டம் இனி... பிஜேபி வைத்ததுதான் சட்டம் ... விரைவில் பிஜேபி ராணுவ ஆச்சி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X