அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'

சென்னை: 'ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே, தமிழக மக்களின் தலையில், கடன் சுமை ஏற்றப்பட்டு, இப்போது, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல, பொது மக்களின் தலையில், தாங்க முடியாத பெருஞ்சுமை ஏற்றப்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

குருவி,தலை,பனங்காய்,கடன்,சுமை ,ஸ்டாலின்


அவரது அறிக்கை:


'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பர். கருவூலத்தில் இருந்தால் தான்,திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

அரசு கருவூலம் காலி; அவர்களின் இதயமும் காலி. முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, தமிழகத்தை, 3 லட்சத்து, 26 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளி, தத்தளிக்க வைத்துள்ளது. இதில், 4 ஆண்டுகளில் மட்டும், அ.தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டால், அதிகரித்துள்ள கடன் தொகை மட்டும், 1 லட்சத்து, 86 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை, தலைமை கணக்கு தணிக்கை துறை அம்பலப்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே, தமிழக மக்களின் தலையில் கடன் சுமை ஏற்றப்பட்டு, இப்போது, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல, பொது மக்களின் தலையில் தாங்க முடியாத பெருஞ்சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதுதான்,இந்த ஆட்சியின் நிர்வாக அலங்கோலம்; அவலட்சணம். வேலுார் லோக்சபா தேர்தலில், அதிகாரம் ஆளுங்கட்சியிடம் இருந்தாலும், மக்கள், நம்பக்கம் இருக்கின்றனர். தேர்தலில் வெற்றி

Advertisement

கனியை பறித்து, கருணாநதியின் காலடியில் காணிக்கையாக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாணவிக்கு வாழ்த்து!


ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற, விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் போபாலில் நடந்த போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற, சென்னை, சூளைமேடு, நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த மாணவி ஷீபா பிரின்சி, சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
23-ஜூலை-201920:12:36 IST Report Abuse

S.Ganesanஏங்க மு.க ஆட்சியில் கலர் டிவி கொடுத்தது உங்க சொந்த காசிலா ? கண்டபடி இலவசங்களை ஆரம்பித்தது யாருங்கோ ? கோடி கோடியா லாபம் பார்க்கும் சினிமா முதலாளிக்கு, படத்தின் பெயர் தமிழில் இருந்தா வரி விலக்கு என்று சொன்னது யாருங்கோ ? அப்போவெல்லாம் கடன் ஏறவில்லையா ? லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கும் , வேலையே செய்யாமல் சும்மா இருந்த ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்த போது கடன் ஏறவில்லையா ? மு.க வுக்கு பாராட்டு விழாக்கள் நடத்திய போது இதெல்லாம் தோன்றவில்லையா ? தலைமை செயலகத்திற்கு தோட்டா தரணியை வைத்து லட்ச கணக்கில் செலவு செய்து செட்டு போட்ட போது கடன் ஏறாமல் என்ன வரவா வந்தது?

Rate this:
blocked user - blocked,மயோட்
23-ஜூலை-201920:03:21 IST Report Abuse

blocked userசுடலை பதவிக்கு வந்திருந்தால் கதை கத்தலாகி இருக்கும். 3.2 லட்சம் கோடியுடன் நகைக்கடன் போன்றவையும் சேர்ந்து 5 லட்சம் கோடியை தாண்டி இருக்கும். யார் செய்த புண்ணியமோ சொடலை முதல்வராகவில்லை.

Rate this:
babu -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201918:03:45 IST Report Abuse

babuஅதானே, கடனிலேயே காலம் தள்ளும் நாட்டை , ஆண்டவர்கள் மட்டும் கோடீஸ்வரர்கள், கடனிலேயே காலம் தள்ளும் நாட்டில், ஆட்சியை பிடிக்க மட்டும் கோடிகளில் செலவு செய்யும் கட்சிகள், எந்த அரசு நிறுவனத்தையும் லாபத்தில் நடத்த தெரியாத மந்திரிகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம்( நிறுவனங்களுக்கு நஷ்ட கணக்கு காட்டினால் தான் லாபத்தை சுருட்ட முடியும், கடனை அரசு கணக்கில் ஏற்ற முடியும்.. போக்குவரத்து துறையை பார்த்து உணர்ந்து கொள்ளலாம்)5 பைசா கூட கடனில் குறைக்காமல் ஆட்சிகளின் சாதனை என்று தேர்தல் சமயங்களில் சாதனை பட்டியல் வேறு. நம்புங்க மக்களே அரசாங்க சம்பளம் கிடைக்குமே என்றும், சேவை செய்ய வாய்ப்பு கிடைக்குமே என்றும் தான் கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நம்பாதவன் பூரா நக்சல் மற்றும் தேசதுரோகி.

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X