கேரளா: கனமழையால் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019
Advertisement
 கேரளா, கனமழை, 5 பேர், நீரில், மூழ்கி, இறப்பு

திருவனந்தபுரம்:கேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. 300 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் கண்ணுார் அருகே பையனுார் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். கோழிக்கோடு, காசர்கோடு பகுதியில் தலா ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சூர் முகுந்தாபுரத்தில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். கொல்லம் நீடகரா கடற்கரையில் தமிழக மீனவர் உடல் கரை ஒதுங்கியது. கைகாசர்கோடு, கண்ணுார், கோழிகோடு பகுதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி வலுவான காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.-

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X