மீண்டும் கூடிய சட்டசபை: மீண்டும் கூச்சல்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
 கர்நாடகா சட்டசபை. மீண்டும். கூச்சல்

பெங்களூரு: 2 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடகா சட்டசபை மீண்டும் கூடியது. பா.ஜ. உறுப்பினர்கள் இன்றே நம்பிக்கை ஒட்டெடுப்பை நடத்த வலியுறுத்தினர்.


latest tamil news


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இன்று கர்நாடகா சட்டசபை கூடியது இதில் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இன்று மாலை 6 மணியளவில் ஓட்டெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த வெள்ளியன்று சபையை ஒத்திவைக்கும் போது உறுதி அளித்ததுபோல நான் ஓட்டெடுப்பை இன்று நடத்துவேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.


latest tamil news



சட்டசபை நிகழ்வுகளையும் கவனிக்க கவர்னரின் பிரதிநிதியாக அவரது செயலர் ரமேஷ் வந்து இருந்தார். அவர் நேற்றிரவு கவர்னருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று பகல் 1:30 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முடிக்க முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.தொடர்ந்து சட்டசபையில் அமளி நிலவியதால் 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் கூடியது.
எடியூரப்பா கோரிக்கை
பா.ஜ.வைச் சேர்ந்த எடியூரப்பா கூறியது, நள்ளிரவு ஆனாலும் பரவாயில்லை. நேரத்தினை வீணடிக்காமல் இன்றே நம்பிக்கை ஒட்டெடுப்பை நடத்திட வேண்டும் என்றார்.
சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில், நம்பிக்கை ஒட்டெடுப்பிற்காக நான் நாளை காலை வரை கூட நான் காத்திருக்கிறேன் என்றார்.
காங். எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மீண்டும் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகுந்தன் - குழித்துறை ,இந்தியா
23-ஜூலை-201909:56:40 IST Report Abuse
முகுந்தன் சட்ட சபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்ததே அண்ணாச்சி குமாரசாமி தான். இப்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்த விடாமல் தடுப்பதும் அவரும் அவரது கூட்டாளிகளும் தான். என்ன கொடுமை சரவணன் இது? இடையில் 'நான் பதவியில் தொங்கிக்கொண்டிருக்க விரும்பவில்லை' என்று வீராப்பு வசனம் வேறு. அவருடைய கட்சிக்காரரான சபாநாயகரே ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவிக்குமளவுக்கு சபையின்/ சபாநாயகரின் கண்ணியம் களங்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. மக்களுக்கு மக்களாட்சியின் மேலேயே வெறுப்பு ஏற்பட்டு விடும். ஒன்று, குமாரசாமியும் அவரது கூட்டாளிகளும் அவர்களே கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மேல் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாபஸ் வாங்கிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் நடக்கும் கேலிக்கூத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
23-ஜூலை-201909:06:06 IST Report Abuse
vbs manian உச்ச நீதி மன்றம் சிக்கலை அதிகரிக்கிறது
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
23-ஜூலை-201904:33:31 IST Report Abuse
Subramanian Arunachalam இது சபா நாயகர் திரு குமாரசாமி மற்றும் கர்நாடக காங்கிரஸ் மக்கள் சேர்ந்து நடத்தும் நாடகம் . இதில் ஏமாறுவது அவர்களுக்கு ஒட்டு போட்ட மக்கள் மட்டும் தான் . திரு எட்டிஉரப்பா முதல் மந்திரியாக நீடிக்க கூடாது என்று அவருக்கு ஒரு நாள் கூட கொடுக்காமல் உச்ச நீதி மன்றத்தின் கதவை நள்ளிரவில் தட்டி அவர்கள் விருப்பப்பட்ட உத்தரவை பெற்ற கும்பல் தான் இப்போது மக்களின் முகத்தில் காரி உமிழ்கிறது . உச்ச நீதி மன்றமும் இந்த கும்பலுக்கு ஆதரவாகவே செயல் படுகிறது
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
23-ஜூலை-201907:22:15 IST Report Abuse
Darmavanஎல்லாவற்றுக்கும் காரணம் கேவலமான சட்டம். எதுவும் தீர்மானமாக வரை அறுக்கப்படவில்லை ..சட்டத்தின் ஓட்டையில் புகுந்து இந்த திருடர்கள் மக்களை கேவலப்படுத்துகிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X