நிரந்தர குடியுரிமை கேட்கிறார் எழுத்தாளர் தஸ்லீமா | I'm daughter of this soil, hope to get permanent or longer resident permit: Taslima Nasreen | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிரந்தர குடியுரிமை கேட்கிறார் எழுத்தாளர் தஸ்லீமா

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (7)
Share
நிரந்தர ,குடியுரிமை , எழுத்தாளர் தஸ்லீமா

புதுடில்லி: வங்கதேசத்தை சேர்ந்த பிரபல தஸ்லிமா நஸ் ரீன், 56., பெண்கள் உரிமைகளை வலியுறுத்தியும், முஸ்லிம் பழமைவாதத்தை எதிர்த்தும் கட்டுரைகள் எழுதினார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பயங்கரவாதிகள், இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
1994 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். தற்போது ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். 2004 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்இந்தியாவில் அவரது விசா, ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது விசா, ஜூலை 23ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, விசாவை நீட்டிக்க கோரி, தஸ்லிமா மனு தாக்கல் செய்தார். இதை ஏற்று, அவரது விசா, ஓரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தஸ்லீமா கூறுகையில், இந்தியா என் தாய்வீடு. நான் இந்த மண்ணின் மகள், எனக்கு நிரந்தமாக குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்..

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X