அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஒரு சொட்டு நீர் கூட வீணாகாது!
முதல்வர் இ.பி.எஸ்., உறுதி

சேலம்:'' தமிழகத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல்,உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,''என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதியளித்தார்.

ஒரு சொட்டு,நீர்,வீணாகாது,இ.பி.எஸ்., உறுதி


சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் உபரி நீரை ஓமலுார், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்டா விவசாயத்துக்கு, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தில், 'பம்பிங் ஸ்டேஷன்' அமைத்து, ஆற்றின் இரு புறத்திலும், 50 கி.மீ., வரையுள்ள விவசாயநிலங்கள் பயன்பெறும் வகையில், நீரை எடுத்துச் செல்ல ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், வறண்ட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு, தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். அதே போல், தமிழகத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல், உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்.காவிரியில், நான்கு இடங்களில், கதவணை கட்ட, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும்வகையில், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் தேவையான தண்ணீர் வந்தவுடன், சம்பா பாசனத்துக்கு, தண்ணீர் திறந்து விடப்படும்.

Advertisement

தற்போது, கேரளா மற்றும் கர்நாடகாவில், கன மழை பெய்து வருகிறது. கர்நாடகா வழங்கக்கூடிய நீரை, முறையாக பெற்று, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவு சாலைக்கு, நிலம் வழங்க, விவசாயிகள் தானாக முன் வந்துள்ளனர்.

சேலத்தில், புதிய அரசு சட்டக் கல்லுாரி இந்தாண்டிலேயே துவங்கப்படும். தீவிரவாதத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Bengaluru,இந்தியா
25-ஜூலை-201912:23:07 IST Report Abuse

Venkat தமிழகத்தில் முன் உதாரண அரசியல்...

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201914:59:33 IST Report Abuse

skv srinivasankrishnaveniமேட்டூர் ஆணை எங்கே இருக்குங்க ????????செல்லாமலேதானே .

Rate this:
RAJAS - chennai,இந்தியா
23-ஜூலை-201920:37:49 IST Report Abuse

RAJASராமதாஸ் சொன்னது போல் காவிரியின் எல்லா நீர் வளத்தையும் எடப்பாடி சேலத்திற்க்கே கொண்டு போகிறார். இதை யாராவது கவனித்தீர்களா

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X