பதிவு செய்த நாள் :
மோடி அரசின் 50 நாள் சாதனை பட்டியல்:
வாக்குறுதிகள் நிறைவேறுவதாக பெருமிதம்

புதுடில்லி: பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இந்த கால கட்டத்தில் செய்த சாதனைகள் குறித்த பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

மோடி,அரசு,50 நாள்,சாதனை,பட்டியல்


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்று, 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இந்த கால கட்டத்தில், அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், சாதனைகள் குறித்த பட்டியலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நேற்று வெளியிட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: மக்கள் நலத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள், அனைவருக்கும் சமூக நீதி போன்றவை, தே.ஜ., கூட்டணி அரசின் முந்தைய பதவி காலத்தை விட, தற்போது மிக விரைவாக

நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது, மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும், வேகமாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:


● நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்துவது என்பது, வெறும் கனவு அல்ல; கண்டிப்பாக, அதை சாதித்து காட்டுவோம்; அதற்கான திட்டங்கள் தயாராகி உள்ளன
● உள்கட்டமைப்பு, சமூக நீதி, கல்வி ஆகிய துறைகளில், இந்த, 50 நாட்களில், சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன
● விவசாயி, வர்த்தகர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், நடுத்தர வகுப்பினர் என, அனைத்து தரப்பினருக்குமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன
● சாலை, ரயில்வே, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது
● நீர்வள மேம்பாட்டுக்காக, 'ஜல சக்தி' என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அமைச்சகத்தின் கீழ், 2024க்குள், நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன
● நம் நாட்டுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முதலீடுகள் குவிகின்றன. அடுத்த ஐந்து ஆண்டு களில், புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படும்
● விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
● வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம், நடுத்தர குடும்பத்தினருக்கான வரிச் சலுகை, வீட்டுக் கடன் வட்டி குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன
● பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
26-ஜூலை-201916:15:40 IST Report Abuse

RAMESHI am really wondering in two things.. why this govt not showing the Interest to reduce the Petrol and dissel price and why not increase the PF pension amount from 1000 to 3000?

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஜூலை-201917:54:51 IST Report Abuse

DSM .S/o PLM சார் கொஞ்சம் கீழக்கரை பக்கம் ராணுவத்தை அனுப்பி நாலு தட்டு தட்டுங்களேன்.. அப்படியே அங்கன சோழிய முடிச்சுட்டு , அந்த நெடுவாசல் கிடுவாசல் னு ஒரு ரவுண்டு வரச்சொல்லுங்க ..

Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
23-ஜூலை-201917:44:46 IST Report Abuse

K.P  SARATHIமுதலில் GST சேவை வரி ஏன் இன்னும் குறைக்கவில்லை, 5 முதல் 10 பேர் வரை வேலை செய்யும் 1000 நிறுவனங்கள் மேல் இந்த GST யால் வேலை இழந்தார்கள். PAYMENT வருவதற்குள் நாம் GST கட்டவேண்டும், இது மிகவும் கொடுமை

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X