பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பெட்டி போல பள்ளி கட்டடம்: மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 ரயில் பெட்டி போல பள்ளி கட்டடம்: மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்

ஸ்ரீபெரும்புதுார்:ரயிலில் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற, பள்ளி மாணவ - மாணவியரின் ஆசையை நிறைவேற்ற, ரயில் பெட்டிகள் போல, பள்ளி கட்டடத்தில் வர்ணம் அடித்து, தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, பொதுமக்கள் நன்கொடையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை, பள்ளி நிர்வாகத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த பள்ளி கட்டடத்தில், ரயில் பெட்டிகள் போல் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மட்டுமின்றி, மக்களையும் கவர்ந்துள்ளது.இதன் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. தலைமை ஆசிரியை, உண்ணாமலை தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீபெரும்புதுார் கல்வி மாவட்ட அலுவலர், மதிவாணன் பங்கேற்று, பச்சை கொடியசைத்து, ரயில் பெட்டி போல் வர்ணம் அடித்த சுவரை திறந்து வைத்தார்.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அதன் அருகே நின்று, ரயிலில் செல்வது போன்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை, உண்ணாமலை கூறியதாவது:மாணவர்கள், ரயிலில் சுற்றுலா செல்ல ஆசைப்படுவதாக, என்னிடம் கூறினர். மாணவர்களின் ஆசையை நிறைவேற்றவும், சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளியில் உள்ள நான்கு வகுப்பறை சுவரில், ரயில் வரைந்துள்ளோம். கதவு, ஜன்னல்களை, ரயில் பெட்டி போல், பெயின்ட் செய்து மாற்றியுள்ளோம்.இது, பார்ப்பதற்கு, தத்ரூபமாக ரயில் போல் இருப்பதால், பள்ளி இடைவெளி நேரத்தில், மாணவர்கள், ரயிலில் ஏறி இறங்குவதை போல், விளையாடுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-ஜூலை-201915:27:08 IST Report Abuse
Darmavan குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்கு மகிழ்ச்சி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-ஜூலை-201912:01:18 IST Report Abuse
Girija வாழ்த்துக்கள் இதுபோல ஊருக்கு நூறு ஆசிரியர்கள் கிடைத்தால் போதும் இந்தியா விரைவில் அமெரிக்காவிற்க்கே கட்டளைபோடும் .
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
23-ஜூலை-201905:42:44 IST Report Abuse
Amirthalingam Sinniah நிலவுக்கு போகவேண்டுமென்றால் , பிள்ளைகளுக்காக ரோக்கற் செய்து வையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X