பதிவு செய்த நாள் :
அமளி!
ராஜ்யசபாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும்..
பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கோஷம்

புதுடில்லி: கர்நாடகா அரசியல் குழப்பம், உத்தர பிரதேசத்தின் சோன்பத்ராவில் நடந்த துப்பாக்கிச் சூடு என, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா நேற்று, பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், அலுவல் பாதிக்கப்பட்டது.

ராஜ்யசபா ,எதிர்க்கட்சிகள்,அமளி!


கடந்த சில நாட்களாக, பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், பார்லி.,யின் இரு சபைகளும் அமைதியாகவும், சுமுகமாகவும் நடந்து வந்தன.

ஒத்திவைப்புகள் இல்லாமல், அலுவல்கள் நடந்து வந்தது, பலருடைய பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோஷம் இட்டு, அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி, எம்.பி.,க் கள், சபையின் மையப் பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா நேற்று, பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபா நேற்று கூடியதும், மறைந்த டில்லி முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்' என, காங்., உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.''இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து விவாதிக்க முடியாது,'' என, சபை தலைவர், வெங்கையா நாயுடு கூறினார்.

துப்பாக்கிச் சூடு


அதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில், கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பிரச்னை

எழுப்பின. சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், பகல், 12:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியபோது, 'கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்' என, துணைத் தலைவர், ஹரிவன்ஸ் அறிவித்தார்.

ஆனால், 'கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என,எதிர்க்கட்சிகள் வரிசைகட்டி கோஷமிட்டன. இதனால், மதியம், 2:00 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியபோது, மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய்க்கு, துணைத் தலைவர் அனுமதி அளித்தார்.

இது தொடர்பாக, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். 'இந்த மசோதாவை படித்து பார்க்க, போதிய அவகாசம் அளிக்கவில்லை. அதனால், மசோதாவை ஒத்தி வைக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.இது தொடர்பாகவும், கோஷம், அமளி எழுந்ததால், மாலை, 3:00 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக, துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

இவ்வாறு, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ், திரிண முல் காங்., சமாஜ்வாதி என, அனைத்து எதிர்க்கட்சிகளும் கோஷமிட்டதால், ராஜ்யசபா பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், அலுவல் பாதிக்கப்பட்டது.

ஒத்திவைப்பு


லோக்சபா நேற்று கூடியதும், லோக் ஜனசக்தி தலைவர், ராம்விலாஸ் பஸ்வானின் தம்பியும், லோக்சபா, எம்.பி.,யுமான ராமச்சந்திர பஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மதியம், 2:00 மணி வரை, சபையை ஒத்தி வைப்பதாக, சபாநாயகர், ஓம் பிர்லா அறிவித்தார்.இதற்கு, எதிர்க்கட்சிகள்கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'நடப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, சபையை நாள் முழுவதும் ஒத்தி வைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள்

Advertisement

வலியுறுத்தின.''இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பு உறுப்பினர் உயிர் இழந்தாலும், லோக்சபா செயல்படும் என, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என, ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

லோக்சபா மீண்டும் கூடியதும், தாக்கல் செய்யப் பட்ட மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா ஆகியவை விவாதங்களுக்கு பின், நிறைவேற்றப்பட்டது.

கூட்டத் தொடரை நீட்டிக்க எதிர்ப்பு



பதினேழாவது லோக்சபாவின் முதல் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. ஜூன், 17ம் தேதி துவங்கிய இந்தக் கூட்டத் தொடர், வரும், 26ல் முடிய உள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா தலைமையில், அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, 'பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. மேலும், சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. 'அதனால், இந்தக் கூட்டத் தொடரை, ஆக., 2 வரை நீட்டிக்க வேண்டும்' என, ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், கூட்டத் தொடரை நீட்டிக்கக் கூடாது என, அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதியுடன் கூறியுள்ளன. இந்தக் கூட்டத் தொடர், கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இம்மாதம், 16ம் தேதி நிலவரப்படி, 128 சதவீதம் அளவுக்கு, அலுவல் நடந்துள்ளது.
பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
23-ஜூலை-201904:08:19 IST Report Abuse

blocked userஅமளி செய்தால் சம்பளம் மற்றும் படி கட் என்று சொன்னால் ஒருவேளை அமளி குறையும் என்று நினைக்கிறேன்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X