முன்னாள் போலீஸ் கமிஷனரை கைது செய்ய தடை நீட்டிப்பு

Added : ஜூலை 23, 2019
Advertisement

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், 'சாரதா சிட் பண்ட்' ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை, மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, சாரதா சிட் பண்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டிய, பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, 2014ல், சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.அப்போது, கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த, ராஜிவ் குமார், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், முக்கிய ஆவணங்களை மறைத்து விட்டார் என்றும், சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.மேலும், ராஜிவ் குமாரை கைது செய்து விசாரிக்கவும், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது.தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு, ராஜிவ் குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோல்கட்டா உயர் நீதிமன்றம், ஜூலை, 22 வரை தடை விதித்துஇருந்தது.இந்த தடை, நேற்றுடன் முடிந்த நிலையில், ராஜிவ் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, மதுமதி மித்ரா, ராஜிவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை, மேலும், ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.மேலும், தன்னை கைது செய்ய அனுமதி கேட்டுள்ள, சி.பி.ஐ.,யின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு, ராஜிவ் குமார் தாக்கல் செய்துள்ள மனு மீது, இன்று விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X