அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கல்வித்துறையில் தனி முத்திரை!': அமைச்சர் பெருமிதம்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
பல்லடம்:'கல்வித்துறையில், தமிழகம் தனி முத்திரை பதித்து வருவதாக,' பல்லடத்தில் நடந்த விழாவில், அமைச்சர் பேசினார்.பல்லடம் கல்வி மாவட்டத்தில், 2019-20ம் ஆண்டு, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும் விழா, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்எல்.ஏ., நடராஜன் வரவேற்றார்.கால்நடை துறை அமைச்சர்
 'கல்வித்துறையில் தனி முத்திரை!': அமைச்சர் பெருமிதம்

பல்லடம்:'கல்வித்துறையில், தமிழகம் தனி முத்திரை பதித்து வருவதாக,' பல்லடத்தில் நடந்த விழாவில், அமைச்சர் பேசினார்.பல்லடம் கல்வி மாவட்டத்தில், 2019-20ம் ஆண்டு, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும் விழா, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்எல்.ஏ., நடராஜன் வரவேற்றார்.கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார, மற்றும் கல்வி அடிப்படையில் மேன்மை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்கள் திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தமிழக பள்ளி கல்வித்துறை, கல்வித்துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது. நடப்பு ஆண்டு படிக்கும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவே, தேர்வுக்கு முன் அவர்களுக்கு 'லேப்-டாப்' வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பல்லடம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 9 பள்ளிகளை சேர்ந்த, 4,179 மாணவர்களுக்கு, 4.34 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்டாப்கள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., சென்பகவல்லி, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, தாசில்தார் சாந்தி உட்பட, அதிகாரிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil kumar - Dindigul,இந்தியா
23-ஜூலை-201910:19:22 IST Report Abuse
senthil kumar இன்னும் திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பெரும்பாலான மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்கப்படவில்லை இந்த லட்சணத்தில் மாணவர் நலன் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. மேலும் இவர்கள் கொடுக்கும் லேப்டாப் திட்டம் முற்றிலும் தவறானது ..நான் பார்த்தவரை பெரும்பாலான வீட்டில் இது திரை படம் டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு தான் பயன் படுகிறது. இதற்கு பதிலாக பள்ளிகளிலேயே அதிக கம்ப்யூட்டர் வாங்கி மாணவர்கள் பயன் படுத்த செய்யலாம். உதாரணத்துக்கு ஒரு பள்ளியில் ஐநூறு மாணவர்கள் இருந்தால் இருநூறு கம்ப்யூட்டர்கள் வாங்கி அதற்கு கணினி ஆசிரியர்களையும் கூடுதலாக வேலைக்கு அமர்த்தி சொல்லி கொடுக்கலாம். தேவையற்றவர்களுக்கு இது போன்ற பயன்கள் செல்வதும் தடுக்கப்படும். உங்களுடைய பத்திரிகையில் இருந்தே கூட ஒவ்வொரு மாணவன் வீட்டிலும் இதை சோதனை செய்து பார்க்கலாம். எனக்கு தெரிந்து ஏற்கனேவே வீட்டில் கம்ப்யூட்டர் இருப்பவர்கள் அரசு இலவச லேப்டாப் சில நாட்களிலேயே விற்பனை செய்துவிடுகின்றனர், முதலில் அரசு புத்தகங்களை ஒழுங்காக கொடுத்து விட்டு பிறகு பேசட்டும் அமைச்சர்.
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
23-ஜூலை-201907:55:26 IST Report Abuse
Krish லேப்டாப் வைத்து நீட்டிற்கு படிக்க முயற்சி செய்யுங்கள்.. அரசு பள்ளி பாடம் மட்டும் போதாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X