அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆங்கில போதனை வகுப்பு: கமல் கட்சி நூதன முயற்சி

சென்னை: மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை கவர, மக்கள் நீதி மையம் கட்சியினர் களமிறங்கி உள்ளனர்.

 கமல் கட்சி, நுாதன முயற்சி, ஆங்கில போதனை வகுப்பு


லோக்சபா தேர்தலில், சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில், மூன்றாவது இடம் பெற்ற, மக்கள் நீதி மையம் கட்சி, 2021ல் நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, வேலுார் தொகுதியில் போட்டியிட போவதில்லை என, அக்கட்சி முடிவு எடுத்துஉள்ளது.


இந்நிலையில், தமிழக வாக்காளர்களிடையே கட்சி சின்னத்தையும், பெயரையும் நிலைநிறுத்த, மக்கள் நீதி மையம் சார்பில், சேவை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவுமற்றும் திருத்த பணிகளை, கட்சியினர் செய்து வருகின்றனர்.தற்போது, இளம் தலைமுறை மற்றும் பள்ளி மாணவ, மாணவியரை கவர, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி முகாமை நடத்த துவங்கியுள்ளனர். இதற்காக, சென்னை, எழும்பூர் பகுதியில், இரண்டு கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.மற்ற மாவட்டத்திலும், இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாற்றுத் திறனாளிமாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

Advertisement

திராவிட கட்சிகளுக்கு மாற்று, மக்கள் நீதி மையம் தான். அரை நுாற்றாண்டாக, இரட்டை இலையும், உதயசூரியனும் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளன. எங்கள் கட்சியை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.அதற்காக, மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களின் குறைகளை, எங்கள் வழியாக எடுத்துச் செல்லும் போது, பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. எங்களுக்கான ஆதரவும் பெருகி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஜூலை-201915:09:36 IST Report Abuse

இந்தியன் kumarமக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சியை பிடிக்கட்டும் ஊழல் செய்பவர்களை ஒதுக்கி தள்ளட்டும்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஜூலை-201915:08:37 IST Report Abuse

இந்தியன் kumarஇங்கிலிஷ் ஸ்பிங்க்கிங் கோர்ஸ் மக்கள் நீதி மையம் நடத்தற மாதிரி ஹிந்தி ஸ்பிங்க்கிங் கோர்ஸ் பாஜக விரும்பும் ஏழை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.

Rate this:
23-ஜூலை-201920:33:11 IST Report Abuse

theruvasaganமோடி பருப்பு தமிழ் நாட்டில் வெந்தா என்ன. வேகாம போனா என்ன. இங்க வெந்த மொத்த பருப்பும் ஓவார குழைந்து நீத்துப்போய் ஒன்றுக்கும் உதவாமல் குப்பையில் கொட்டும்படி ஆகிவிட்டதே. அதை செய்தது யார்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X