கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை கணவனுக்கு ஆயுள்

Added : ஜூலை 23, 2019
Advertisement
 மனைவி கொலை  கணவனுக்கு ஆயுள்

ஈரோடு:கள்ளக்காதலால் பிரிந்து சென்ற மனைவியை, கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு, சுக்கிரமணியகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 38; தறி தொழிலாளி. இவரது மனைவி சீதா, 27; தம்பதிக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.சீதாவுக்கும், அதே பகுதியில் சலுான் கடை நடத்திய பிரபுவுக்கும் கள்ளக்காதல் இருந்தது. பலமுறை நாகராஜ் எச்சரித்தும், கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதனால், நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் எழுதிக் கொடுத்து, சீதாவை விவாகரத்து செய்தார். மூன்று குழந்தைகளுடன், ஓராண்டாக, சங்ககிரியில், பிரபுவுடன், சீதா வாழ்ந்து வந்தார்.ஈரோடு, அசோகபுரத்தில் வசிக்கும், தாய் ரேணுகா வீட்டுக்கு, 2017 மே, ௮ல் சீதா வந்தார். அன்று மாலை, தாயுடன், வீரப்பன்சத்திரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, எதிரில் வந்த நாகராஜ், சீதாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த சீதா இறந்தார்.வீரப்பன்சத்திரம் போலீசார், நாகராஜை கைது செய்தனர். வழக்கு, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நாகராஜுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். கோவை மத்திய சிறையில், நாகராஜ் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X