மல்லையாவுக்கு எதிராக புதிய வழக்கு

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 மல்லையாவுக்கு எதிராக புதிய வழக்கு


லண்டன்:வங்கி மோசடி வழக்கில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தன் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news



கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார்.அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களை தெரிவிக்க உத்தரவிடும்படி லண்டன் நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன் விபரம்:மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையாவின் பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு பல்வேறு சொத்துக்கள் உள்ளன. சொகுசு கப்பல் உட்பட ஏலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு விலைமதிப்பு மிக்க பொருட்களை இந்த அறக்கட்டளையின் பெயரில் விஜய் மல்லையா வாங்கியுள்ளார்.ஆனால் அந்த அறக்கட்டளைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மல்லையா கூறி வருகிறார். எனவே தன் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என அவருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-201912:25:47 IST Report Abuse
Sivakumar Subbian மாட்டுனா தனி குடும்பம், அனுபவிக்க கூட்டு குடும்பம்.இது குறித்து விசாரணை எதுக்கு? பணம் வசூல் செய்து பின் கூட்டா ? தனியா? முடிவு பண்ணிக்காலாம்
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201908:25:30 IST Report Abuse
Babu கண்டிப்பு, கண்டனம், கடுங்கோபம், குட்டு, சரமாரி கேள்வி என பல வித தலைப்புகளில் அரசின் (அரசுத் துறைகளின்) வீர தீர நாடகங்கள் மீடியாக்களில் வலம் வருவது காலம் காலமாக உள்ளது தானே. அதிகாரத்தில் இருப்பவன் தண்டிக்கப்பட்டாலும், டீ விலை குறைந்து விட்டாலும் தானே ஷாக் ஆக வேண்டும். எல்லா ஆட்சியிலும் ஒரே பார்முலா தான்.
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201906:37:17 IST Report Abuse
Nagarajan Duraisamy அதாவது லாபம் முழுவதும் அறக்கட்டளை பெயரில். நஷ்டம் முழுவதும் மக்கள் தலையில். நல்ல கணக்கு. இந்த ரீதியில் போனால் நாடு உருப்படும். அடுத்து நீரவ் மோடி, சோக்சி போன்றவர்கள் கதையிலும் இது தான் நடக்கும். இதற்கு பெயர் தான் விஞ்ஞான திருட்டு. அநேகமாக அவருடைய அப்பா பெயரில் இருக்கும் அறக்கட்டளை எல்லா கட்சிக்கும் தேர்தல் நிதி கொடுத்திருக்குமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X