கூட்டுறவுல கொள்ளை... யாருக்கும் பயமில்லை! 'கூடி வாழும்' அதிகாரிகளுக்கு 'கோடி' நன்மை

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதிய நேரம்.'டிவி'யில் செய்தி சேனலை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. வெளியே சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், ''அக்கா, சந்திரயான்-2, 'சக்ஸஸ்புல்'லா ஏவிட்டாங்க, பார்த்தியா...,'' என்றவாறே, சோபாவில் அமர்ந்தாள். மேஜையில் கிடந்த நாளிதழில், பட்டாசு வியாபாரிகள் மாநாடு செய்தி கண்ணில் தென்பட்டது.சித்ரா, அந்த நாளிதழை கையில் எடுத்தவாறு, ''பட்டாசு
 கூட்டுறவுல கொள்ளை... யாருக்கும் பயமில்லை! 'கூடி வாழும்' அதிகாரிகளுக்கு 'கோடி' நன்மை

மதிய நேரம்.'டிவி'யில் செய்தி சேனலை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. வெளியே சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், ''அக்கா, சந்திரயான்-2, 'சக்ஸஸ்புல்'லா ஏவிட்டாங்க, பார்த்தியா...,'' என்றவாறே, சோபாவில் அமர்ந்தாள். மேஜையில் கிடந்த நாளிதழில், பட்டாசு வியாபாரிகள் மாநாடு செய்தி கண்ணில் தென்பட்டது.

சித்ரா, அந்த நாளிதழை கையில் எடுத்தவாறு, ''பட்டாசு கடைக்காரங்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு, 30 நாளைக்கு முன்னாடி, லைசென்ஸ் தரணும்னு தீர்மானம் போட்டிருக்காங்க,'' என்றாள்.

''அக்கா, பட்டாசு கடை நடத்துறதுக்கு லைசென்ஸ் வாங்குறது அவ்ளோ ஈசி இல்லை. பண்டிகை நாள் நெருங்க, நெருங்க லஞ்ச 'ரேட்' கூடிட்டே இருக்கும். வழக்கமாக, 15 நாளைக்கு முன்னாடி தான் அனுமதி கொடுப்பாங்க. 30 நாள் 'பர்மிஷன்' தரணும்னு கேட்டுருப்பாங்க. கஷ்டப்பட்டு அனுமதி வாங்குனாலும், மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, லோக்கல் போலீசுன்னு ஏகப்பட்ட பேரு வந்துட்டு போவாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா 'கிப்ட் பாக்ஸ்' கொடுத்தாகணும். எல்லா செலவையும் கூட்டி கழிச்சு கணக்கு பார்த்துதான், விலை நிர்ணயிக்கிறாங்க...''

''ஓ... பட்டாசு ரேட் அதிகமா இருக்கறதுக்கு காரணமே இதுதானா...'' என்றபடி, ''கருவூலத்துறை சாப்ட்வேர் ரொம்பவே பாடாப்படுத்துதாமே...'' என, கிளறினாள் சித்ரா.''ஆமாக்கா, புது சாப்ட்வேர் அறிமுகம் செஞ்சுருக்காங்க. அதுலதான் சம்பள பட்டியல், செலவு பட்டியல் பதிவேற்றம் செய்யணும்னு சொல்லியிருக்காக.'சர்வர்' ரொம்ப 'ஸ்லோ'வா இருக்குறதால, ஒரு 'என்ட்ரி' கூட போட முடியலைன்னு, அரசுத்துறை அலுவலருங்க புலம்பிட்டு இருக்காங்க.''

கருவூலத்துறையில கேட்டா, சாப்ட்வேர் தயார் செஞ்ச, 'விப்ரோ' நிறுவனத்துல 'ஹெல்ப் டெஸ்க்' இருக்கும்; அங்க கேளுங்கன்னு சொல்றாங்க. அவங்ககிட்ட கேட்டா, எர்ரர் மெசேஜை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புங்கன்னு சொல்றாங்க. இதை கேட்டுட்டு, அரசுத்துறை அலுவலருங்க தலைய பிச்சுக்கிறாங்க.''தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், போதிய பயிற்சியும் இல்லாத சில அரசுத்துறை அலுவலர்கள் ரொம்ப சிரமப்படுறாங்க. முறையா பயிற்சி தராம, இப்படி பண்ணுறது நியாயமான்னு புலம்பிட்டு இருக்காங்க,'' என்ற மித்ரா, சமையலறைக்குள் நுழைந்தாள்.

'டிவி'யில் சேனலை மாற்றிய சித்ரா, ''சிறந்த போலீஸ் ஸ்டேஷன் விருது வாங்கறதுக்கு, நம்மூர்ல இருந்து 'லிஸ்ட்' போயிருக்காம்,'' என்றாள்.''எதுக்கு லஞ்சம் வாங்குறதில்லையா... இல்ல... கட்டப்பஞ்சாயத்து செய்றதில்லையா...''''ஏம்ப்பா... இப்படி கேட்டுட்ட...''''வேறென்னக்கா, சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்ல எப்ப பார்த்தாலும், கட்டப்பஞ்சாயத்து தானே நடக்குது. அஞ்சு லட்சம் ரூபாய்க்கு கீழே திருட்டு நடந்தா, வழக்கு பதியறது இல்லையாம். சி.எஸ்.ஆர்., மட்டும் பதிஞ்சிட்டு விட்டுடுறாங்களாம். வாகனம் திருடு போயிருச்சு; பூட்டியிருந்த வீட்டை ஒடைச்சு திருட முயற்சி பண்ணியிருக்காங்கன்னு சொன்னா, ஸ்டேஷன்ல யாருமே கண்டுக்கிறதில்லையாம்...''

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில தலையிட்டு, எழுதி வாங்குறது; கேஸ் போடுறதுன்னு மிரட்டுறதை மட்டும் கரெக்டா செய்றாங்களாம். யாராவது கேட்டா, துணை கமிஷனர் சொன்னாரு; கமிஷனர் சொன்னாருன்னு பதில் வருதாம். பெரிய ஆபீசர் பெயரை சொல்லி, வெளிப்படையாவே கட்டப்பஞ்சாயத்து செய்றாங்களாம்...'' என்ற மித்ராவின் மொபைல் போனுக்கு, அழைப்பு வந்தது.

''என்ன, விவேகானந்தன் நல்லா இருக்கீங்களா...'' என்றவாறு, சித்ராவுக்கு இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.டீயை உறிஞ்சிய சித்ரா, ''நம்மூர்ல இருக்கற கூட்டுறவு சொசைட்டியில, 20 கோடி ரூபாய் சுருட்டியிருக்காங்க. சென்னையில இருக்கிற உயரதிகாரிங்க கண்டுபிடிச்சு, சம்பந்தப்பட்ட செயலரை 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்க. லஞ்சப்பணத்துல வாங்குன சொத்து ஒவ்வொன்றையும் வித்து, சொசைட்டி கணக்குல வரவு வச்சிக்கிட்டு இருக்காங்க. இதுல, ஆளுங்கட்சிக்காரங்க புகுந்து, சொத்து விக்கிறதுல காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க,''

''நீங்க சொல்றது உண்மைதானா?, கூட்டுறவு சொசைட்டியில கோடிக்கணக்குல பணம் இருக்கா, எனக்கு சந்தேகமா இருக்கே...'' என்றாள் மித்ரா.''நம்மூர்ல சில சொசைட்டிங்கள்ல, டிபாசிட் அதிகமா இருக்கு; அதனாலதான், தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு ஆளுங்கட்சி தரப்புல, ரொம்பவே மெனக்கெட்டாங்க. நகை அடமான கடன் வாங்கியிருக்கறதா கணக்கெழுதி, கோடிக்கணக்குல பிராடு வேல செஞ்சு சுருட்டியிருக்காங்க.''முறைகேடு நடந்த சமயத்துல, உயரதிகாரியா இருந்தவரும் கோடிக்கணக்குல பங்கு வாங்கியிருக்காரு. அந்த பணத்துல, ரூ.1.25 கோடியில், ஒரு பிளாட் வாங்கியிருக்காரு; பீளமேடு ஏரியாவுல, 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' கட்டியிருக்காராம்.

ஆளுங்கட்சி தயவு இருக்கிறதுனால, பக்கத்து மாவட்டத்துலதான் இப்ப வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அன்னிய செலாவணி கொட்டுற ஊரு, அங்க, எவ்ளோ அள்ளுறாரோ...'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.''பள்ளி கல்வித்துறையிலும் முறைகேடு நடக்குதாமே...''''ஆமாப்பா, பள்ளிக்கூடங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் குறிப்பிட்ட தொகையை சிறப்பு நிதியா ஒதுக்குவாங்க. பள்ளிக்கு தேவையானதுஅல்லது விளையாட்டு உபகரணம் வாங்குவாங்க. என்ன வாங்குறதுன்னு, அந்தந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர்முடிவெடுப்பாரு.இந்த வருஷம், ஒரு கம்பெனிக்கு 'கான்ட்ராக்ட்' கொடுத்துட்டாங்க. சப்ளை செஞ்ச பொருட்கள் தரமில்லாம இருக்காம்.

ரூ.4,000க்கு வாங்கியிருக்கிற விளையாட்டு உபகரணம், ரூ.1,500 கூட இருக்காதுன்னு, டீச்சர்ஸ் சொல்றாங்க. கல்வி உபகரணங்கள் வாங்குனது, நுால்கள் வாங்குனதிலும் முறைகேடு நடந்திருக்கறதா சொல்றாங்க. மாவட்ட நிர்வாகம் என்ன செய்யுதுன்னே தெரியலை...'' என, புலம்பினாள் சித்ரா.அப்போது, வேலுார் இடைத்தேர்தலை பற்றி, 'டிவி'யில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதைக்கேட்ட மித்ரா, ''நம்மூர்ல இருந்தும் தி.மு.க.,காரங்க, வேலுாருக்கு பிரசாரத்துக்கு போயிருக்காங்களாம்,'' என்றாள்.''நம்மூர் தி.மு.க.,காரங்களுக்கும், ஆளுங்கட்சிகாரங்களுக்கும் 'நெருக்கம்' ஜாஸ்தியாச்சே...''''மொத்தம், 27 'பூத்' ஒதுக்கியிருக்காங்க; ஒரு ஓட்டு கூட, 'மிஸ்' ஆகாம விழணும்னு, 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்களாம். வெளியூர்காரங்களை நல்லா கவனிக்கணும்னு, உள்ளூர்நிர்வாகிகளுக்கு, உத்தரவு போட்டிருக்காங்களாம். நம்மூர்ல இருந்து போனவங்க குஷியா வேலை பார்த்துட்டு இருக்காங்களாம்...'' என்ற சித்ரா, சமையல் வேலையில் மும்முரமானாள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201920:46:07 IST Report Abuse
Diya Same problem with Post Office banking system. No power backup, server down most of the time, employees does not have all the knowledge about their system, no cctv security cameras. Software is developed by Infosys. Even after entering correct data, incorrect data gets stored in the system. Manual presence required to and link each type of account to the internet banking account. Employees lose patience assuming they have done everything while their work is incomplete. When there is no power or server is down, it becomes a tea break for them. For the illiterate people, depending upon the employees is fine. But for others, doing multiple visits for simple work is not fair.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X