தமிழ்நாடு

ஒரு தேசம்... ஒரு சலான்! போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஒரு தேசம்... ஒரு சலான்! போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு

கோவை:'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வாயிலாக, அபராதத்தை போலீசாரிடம் ஆன்லைனில் செலுத்தலாம். சலான் பெற்று பிற்பாடு செலுத்த தவறுவோர், பிற்பாடு வாகனத்தை விற்கும்போதோ, உரிமம் புதுப்பிக்கும்போதோ சிக்கிக்கொள்வர்.
நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு, போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களே காரணம். இதைக்கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க, பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டன.
இருப்பினும், அபராதம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.இதைக்கருத்தில் கொண்டு, இ - சலான் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும், அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு, 'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எங்கிருந்தும், ஆன்-லைன் முறையில், அபராதம் செலுத்தலாம்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:சாலை விதிகளை மீறுவோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பவ இடத்தில் ஆன்-லைன் பேங்கிங் முறை அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு முறையில் பணத்தை, இ-சலான் இயந்திரத்தின் மூலம் செலுத்தலாம்.
இது தவிர, இ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.
இதன் மூலம், போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். அனைத்து நடைமுறைகளும், ஆன்லைன் முறை என்பதால், பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பில்லை.இத்திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 17 கருவிகள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
27-ஜூலை-201914:26:36 IST Report Abuse
Swaminathan Chandramouli தலைக்கவசம் அணியவில்லை என்று அந்த மனிதரை காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கூட்டமாக அவரை வழிமறித்து கட்டம் கட்டுகிறீர்களே அவரிடம் அபராதம் வசூலிப்பீர்களா அல்லது அவருக்கு ஒரு தலைக்கவசம் உங்கள் சார்பில் அளிப்பீர்களா அல்லது அவரை சிறையில் அடைப்பீர்களா . காவல் துறையை சேர்ந்த உங்கள் கூட்டாளி ஒருவர் தலைக்கவசம் அணியாமல் இருமுறை சென்றுள்ளார் . முதல் முறை அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் . இரண்டாம்முறையும் தலைக்கவசம் அணியாமல் சென்றார் பிடிபட்ட பின் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . ஏன் போலீஸ் காரர் என்றால் வேற்று உலகத்தில் இருந்து வந்தவரா ? பொதுவாகவே போலீஸ் காரர்கள் குற்றமிழைத்தால் அது நிரூபிக்கப்பட்டாலும் துறை ரீதியாகத்தான் விசாரணை நடக்கிறது . தண்டனையும் துறை மூலமாகத்தான் கொடுக்க படுகிறது . நீதி மன்றத்தில் வழக்கு பதிந்து விசாரணைக்கு நீதிமான்கள் வசம் போவது இல்லை . துறை ரீதியாக என்ன தண்டனையளிக்க படுகிறது தெயுமா ? 1 . தாற்காலிக பணியிடை நீக்கம் . சிறிது நாட்கள் கழித்தோ மாதங்கள் கழித்தோ முன்பிருந்த பதவியிலும் ,முன்பிருந்த இடத்திலும் அவர் வைக்கப்படுவார் . அதற்க்கான மொய் வைத்துவிடுவார் 2 )தொலைவில் இருக்கும் காவல் நிலையத்தில் . ஒரு பணியும் செய்யாமல் உட்கார்ந்து இருப்பர் சிலகாலம் கழித்து பழைய மடத்துக்கே வந்து. விட்டதை எல்லாம் மீண்டும் வசூலிப்பார் 3 ) பதவி உயர்வு பெற்று சுகமாக இருப்பார். இது தான் இந்த இரண்டு திராவிட ஆட்சிகளில் நடக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X