2024ல் நிலவுக்கு பெண் 'நாசா' அடுத்த திட்டம்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வாஷிங்டன் : 'நிலவுக்கு, முதல் பெண் மற்றும் அடுத்த ஆண், வரும், 2024ல் அனுப்பப்படுவர்' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.






நிலவில் முதல் முறையாக மனிதர்கள் காலடி வைத்ததன், 50வது ஆண்டையொட்டி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:நிலவில் முதல் முதலாக காலடி வைத்ததன், 50வது ஆண்டை, அமெரிக்கா கொண்டாடி வருகிறது. நிலவுக்கு முதல் பெண் மற்றும் அடுத்த ஆண், 2024ல் அனுப்பப்படுவர்; இதற்கான அனைத்து முயற்சிகளும் துவங்கியுள்ளன.





இந்த திட்டம், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதுடன், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியின் முன்னோட்டமாக இருக்கும். 'ஆர்தமிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில், நிலவில் இதுவரை ஆய்வு செய்யாத பகுதிகள் ஆய்வு செய்யப்படும்.





இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Sankar - chennai,இந்தியா
23-ஜூலை-201908:15:06 IST Report Abuse
S.Sankar காரணம் பயம்தான்.நாசாவில் என்ன கட்டுப்பாடு விதித்தாலும் அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் இந்தியர்கள் இஸ்ரோவில் ஒரு சிறு குற்றமிருந்தாலும் ஊத்தி பெரிதாக்கி அசிங்கப்படுத்திவிடுவார்கள்.மேலும் அரசியல் காரணங்களினால் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201904:39:53 IST Report Abuse
sathiya narayanan நான் சென்ற மாதம் என் மகள் விரும்பியதால் நாசா சென்றுவந்தேன் அங்கு இப்போதைக்கு 50 வருட நிலவு பயணத்தின் கொண்டாட்ட வேறுபாடுகளை பார்த்தேன். அவர்களுக்கு இப்போதைக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லை என்றே தெரிவித்தனர். ஒருவேளை திட்டத்தில் மற்றம் வந்து இருக்கலாம். எனக்கு தெரிந்து இஸ்ரோ வை விட நாசா சிறப்பு மிக்கதாக தெரியவில்லை. ஒரே வித்தியாசம் நாசாவில் இதுபற்றி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்கள். இஸ்ரோ பக்கம் கூட நம்மை அனுமதிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X