பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்; மின் வாகனத்துக்கு வரி குறையுமா?

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து, நாளை மறுநாள் (ஜூலை 24), நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.latest tamil newsஇது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 36வது கூட்டம், 25ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள், காற்றாலை திட்டங்கள் ஆகியவற்றின் மீதான வரி விதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.


latest tamil newsஉள்நாட்டு மின் வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மின் வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாகக் குறைப்பது குறித்தும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மேலும், இக்கூட்டத்தில், லாட்டரி மீதான வரி விதிப்பும் முடிவு செய்யப்படலாம். தற்போது, மாநில அரசு லாட்டரிக்கு, 18 சதவீதமும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிக்கு, 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - Chennai,இந்தியா
23-ஜூலை-201915:40:24 IST Report Abuse
Ramasamy Electric vehicles can be called as 'Green Vehicles' only if they are charged from electricity produced by Renewable Energy. If they use electricity produced from fossil fuel then it is not a green vehicle.
Rate this:
Cancel
23-ஜூலை-201915:34:55 IST Report Abuse
பச்சையப்பன் எதனால் கலந்து கலப்பட பெட்ரோல் விற்பதா ?
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஜூலை-201913:22:01 IST Report Abuse
DSM .S/o PLM மின்வாகனங்கள், சூரிய மின்சக்தியை வீட்டிற்கு வீடு ஊக்குவிப்பது . இதெல்லாம் போதாது.. எங்கல்லாம் சாத்தியமோ , அங்கெல்லாம் சூரிய மின் தகடுகள் அமைக்க வேண்டும். . எல்லா நெடுஞ்சாலை .. ஏன் அணைத்து சாலைகளிலும் , நல்லஉயரத்தில் சூரிய மின்தகடுகளை கூரை போல பொருத்தினால் கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X