பொது செய்தி

இந்தியா

இந்திய அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனா?

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கடந்த 2017 முதல் ரவி சாஸ்திரி உள்ளார். இரண்டு ஆண்டு கால பதவி, உலக கோப்பை தொடருடன் முடிந்தது. இருப்பினும் விண்டீஸ் தொடர் வரை நீட்டிக்கப்பட்டது. அதேநேரம் புதிய தலைமை, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் என 7

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.



latest tamil news



இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கடந்த 2017 முதல் ரவி சாஸ்திரி உள்ளார். இரண்டு ஆண்டு கால பதவி, உலக கோப்பை தொடருடன் முடிந்தது. இருப்பினும் விண்டீஸ் தொடர் வரை நீட்டிக்கப்பட்டது. அதேநேரம் புதிய தலைமை, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் என 7 பேருக்கு தேர்வும் நடக்கிறது.


latest tamil news



ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. இதனால் மீண்டும் இவர் தானா என நினைத்த நிலையில், இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா 42, இந்திய அணி பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஐ.பி.எல்., தொடரில் ஜெயவர்தனா மும்பை அணி பயிற்சியாளராக உள்ளார். இவர் வந்த பிறகு தான் மும்பை அணி மூன்று முறை சாம்பியன் ஆனது. இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராவும் செயல்பட்டுள்ளார்.


latest tamil news



இதேபோல 2011ல் இந்தியாவுக்கு உலக கோப்பை வெல்ல கைகொடுத்த தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடியும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளனராம். இதற்காகத் தான் சமீபத்தில் ஐதராபாத் பயிற்சியாளர் பதவியில் இருந்து டாம் மூடி விலகியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
23-ஜூலை-201912:54:44 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இப்படி நடந்தா, அது ஒரு மனகெட்ட செயல். அப்புறம் எதுக்கு மாஸ்டர் பிளாஸ்டர், தாதா, சீனா பெருஞ்சுவர், தல, வீறு, VVS .
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
23-ஜூலை-201910:51:56 IST Report Abuse
Arasu கூடவே கூடாது..அவரை இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கலாம்...
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
23-ஜூலை-201909:09:55 IST Report Abuse
Asagh busagh பொய்க்கோ போராட்டத்துல குதிப்பான். சொடலை கால டிப்பன ஒரு கட்டு கட்டிட்டு அரை நாள் உண்ணாவிரதம்கிற பேருல AC பக்கத்துல படுத்து எழும்பி ரௌசு பண்ணுவான். ஆனா ஒன்னும் மாற போறதில்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X