வரி வருவாய் வசூலிங்க: பாக்.,கிற்கு ஐ.எம்.எப்., ஆலோசனை

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

வாஷிங்டன்,: கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, அண்டை நாடான பாகிஸ்தான், உள்ளூர் வரி வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி, ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது. பாக்., பிரதமர், இம்ரான் கான், மூன்று நாள் பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர், டேவிட் லிப்டனை, அவர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.



latest tamil news




நிதிநெருக்கடி

அப்போது பாக்.,கில் நிலவும் நிதி நெருக்கடி தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இந்த சந்திப்பு குறித்து, லிப்டன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாக்.,கின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சர்வதேச நிதியத்தின் உதவியுடன் செய்யப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.பொருளாதாரத்தை ஸ்திரமாக்கி, வளர்ச்சிப் பாதையில் பாக்.,கை கொண்டு செல்ல வேண்டும் என, அந்த நாட்டு அரசு முயற்சித்து வருகிறது.உடனடியாக வரி வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளில், அந்நாடு ஈடுபட வேண்டும். கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆலோசனை வழங்கியுள்ளேன்.


latest tamil news




41 ஆயிரம் கோடி

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, பாக்., அரசுக்கு, சர்வதேச நிதியம், சமீபத்தில், 41 ஆயிரம் கோடி ரூபாய் உதவியை அளித்துள்ளது.இந்த நிலையில், இம்ரான் கானின் பயணத்தை எதிர்த்து, பலூச் உள்ளிட்ட பாக்., பழங்குடியினர் அமைப்பினர், வாஷிங்டனில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் இடையே, இம்ரான் கான் உரையாற்றியபோது, அந்த அமைப்பினர் எழுந்து நின்று கோஷமிட்டனர்.


latest tamil news




கிரிக்கெட் அணியில் மாற்றம்!

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாக்., அணி, பெரும் தோல்வியை சந்தித்தது. அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் இடையே உரையாற்றியபோது, முன்னாள் கிரிக்கெட் கேப்டனான, பிரதமர் இம்ரான் கான், இது குறித்து கூறியதாவது:அடுத்த உலகக் கோப்பையின் போது, உலகின் தலைச் சிறந்த அணியாக பாக்., இருக்கும். அதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. சிறந்த வீரர்களை உருவாக்கி, அணியை வலுப்படுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஜூலை-201913:15:02 IST Report Abuse
DSM .S/o PLM ஒவ்வொரு பாகிஸ்தானியனும் தீவிரவாதியாக மாறுவதற்கு ஒரு லட்சம் ருபாய் வருடாந்திர கட்டணம் என்று ஒரு விதியை கொண்டு வாருங்கள். பாகிஸ்தானில் நிறைய வசூலாகும்..
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
23-ஜூலை-201912:51:58 IST Report Abuse
raghavan ஏண்டா, தீவிரவாதத்தை தூண்டி விடுவ, அளவுக்கு மேல அணுகுண்டுகளை வாங்கி அடுக்குவ, அப்புறம் சிங்கள் டீ க்கு அக்கவுண்ட் வைக்காம எப்படி? நீ இந்த ஜென்மத்துல உருப்பட போறதில்ல.
Rate this:
Cancel
23-ஜூலை-201912:24:59 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நம் நாட்டில் பல தொழில் நிறுவனங்கள் இருப்பது போல அங்கே பல தீவிரவாத குழுக்கள் உள்ளன , ஆண்டு வருமானத்தை வைத்து நம் நாட்டில் வரி விதிப்பதுபோல அங்கே ஒரு ஆண்டில் எவ்வளவு குண்டுவைத்து , எவ்வளவு மக்களை கொள்கிறார்களோ அதற்கேற்றாற்போல வரி விதிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X