பொது செய்தி

இந்தியா

'சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்': ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (155)
Advertisement

'சமஸ்கிருத மொழியை அதிகமானோர் கற்கும் வகையில், அதை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.


'பள்ளிக் கல்வியில், மும்மொழி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, மத்திய அரசின், வரைவு கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், 'சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வம் சேவக் அமைப்பின் துணை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, பாரதிய சிக் ஷன் மண்டல், சமீபத்தில், வெளியிட்ட அறிக்கை: மும்மொழி கொள்கையால், சமஸ்கிருதம் அதிகம் பாதிக்கப்படுகிறது.

கட்டாயம்

பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கட்டாயமாக உள்ளது. அத்துடன் ஹிந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக பெரும்பாலானோர், ஹிந்தியை தேர்வு செய்கின்றனர். வெகு சிலரே, சமஸ்கிருதத்தை தேர்வு செய்கின்றனர். அதனால், மும்மொழி திட்டத்துடன், சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு துணை அமைப்பான, சமஸ்கிருத மொழியை பரப்பும், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவர், தினேஷ் காமத் கூறியதாவது:மும்மொழி கல்வி திட்டத்தில், ஹிந்தி மற்றும் தாய்மொழியுடன், மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. கேரளாவில், 1ம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரகண்டில், 3ம் வகுப்பில் இருந்து கற்றுத் தரப்படுகிறது.பல்வேறு மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், இரண்டாவது மாற்று மொழியாக கற்றுத் தரப்படுகிறது. பல்வேறு கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிலும், சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு, 120 பல்கலைகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.

இதைத் தவிர, மத்திய அரசு நடத்தும் மூன்று பல்கலைகள் உட்பட, 15 சமஸ்கிருத பல்கலைகளும் உள்ளன. இதற்கிடையே, சமஸ்கிருதத்தை பேசும் மொழியாக உள்ள கிராமங்களை உருவாக்கவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கிராமங்களை தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் போக்ரியால், உத்தரகண்ட் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார். பந்தோலா கிராமத்தில் உள்ள மக்கள், ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே பேசுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RR Iyengar - Bangalore,இந்தியா
28-ஜூலை-201916:22:50 IST Report Abuse
RR Iyengar பகுத்து அறியும் திறனில்லாத திராவிட பகுத்தறிவாளிகள் எதெற்கெடுத்தாலும் கூச்சல் போடத்தான் செய்வார்கள், என்னவோ இவர்களை தரதரவென இழுத்து சென்று பள்ளிகளில் உக்காரவைத்து கற்றுக்கொடுப்பதை போல திணிப்பு திணிப்பு என்று கூச்சல்கள் ... கத்துக்கப்போறது என்னவோ வருங்கால சந்ததிகள் தான் ... இவர்களில்லை ... ஆனாலும் குய்யோமுறையோ என கூச்சல்கள் (அதுவும் ஊடகங்களில் வலைத்தளங்களில் மட்டுமே) தலைவன் சொல்லிவிட்டான் வேண்டாமென்று ஏனெதற்கு என்ற கேள்விலெல்லாம் கேட்டால் அது வர்ணாசிரம பகுத்தறிவு ... என்னத்த சொல்லி என்னத்த புரிய
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201914:35:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni நமது நாட்டுலே தான் இருந்த சிறந்த மொழி சம்ஸ்க்ருதம் , பிராமின்ஸ் லே வேதம் கற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கிறாங்க என்பது உண்மை, இப்போதும் இந்தியாலே சில கிராமங்களில் சம்ஸ்க்ருத முளிலே ஏ பேசும் மக்கள் இருக்காளே மைசூர் கிட்ட ஒரு கிராமம் இருக்கு, பலர் விருப்பப் பாடமாகவே இந்த மொழியை கற்று தேறுகிறார்கள் எதையும் கம்பெல் பண்ணவே கூடாது , பள்ளிகளை யம் இதுலே கட்டாயம் படுத்துவது மாபெரும் தப்பு , இம்மொழிகர்றாள் வேத விப்பன்னர்கள் ஆகலாம் அல்லது பள்ளி கல்லூரிகளில் டீச்சிங் வேலைக்குப்போகலாம் எவ்ளோபெருக்கு இதுலே ஆர்வம் இருக்கும் சொல்லுங்க நான் ஆர் ஸ்ஸ் க்கு விரோதி இல்லே அவாளோட டிசேபிள் நேக்கு ரொம்பவே பிடிக்கும் . \RSS லே இருக்கு எல்லோருக்கும் சன்ஸ்க்ரிட் நன்னா தெரியுமா?? புலமை உண்டா ? வாதத்துக்கு கேக்கலீங்க மெய்யாலுமே தான் கேக்குறேன் நானும் 9ம் வகுப்புவரை sanskrit பாடமா படிச்சுருக்கேன் இப்போதும் ஓரளவுக்கு புரியும் படிக்கமுடியும் கல்கட்டாலே எங்க பள்ளியில் நாங்கல்லாம் மாண்வர்கள் எல்லோரும் ஆங்கிலம் வங்காளி தமிழ் ஹிந்தி சம்ஸ்க்ருதம் கட்டாயமா படிச்சோம் என்பது உண்மை பலர் அப்போது 9th அண்ட் 10th ஆப்ஷனலா எடுக்க சொன்னபோதும் கூட தமிழுக்கு பதிலாக சம்ஸ்க்ருதம் எடுத்துண்டா, ஒன்னும் வாழ்க்கையிலே குறைஞ்சுபோக்ளீங்களே வேலைக்குபோறவாளுக்கு நோ யூஸ் னு சொல்லிடலாம் வடமொழி ஸ்லோகங்களை அர்த்தம் தெரிஞ்சு படிப்பது ஆனந்தம்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஜூலை-201912:22:21 IST Report Abuse
Malick Raja உலகில் பலரும் பிறப்பதும் சிலர் மட்டும் விதண்டாவாதம் பேசியே மடிவதும் உலக நடைமுறைதான். இந்திராகாந்தி வந்தார் இருந்தார் இறந்தார்.. ஆட்சி .. அவசரநிலை. ஆட்சி இழப்பு, ஆட்சியில் அமர்ந்து இறப்பு.. இதுதான் உலக நடைமுறை. எனவே இதுபோன்ற கூச்சல்கள் கும்பல்காளால் உருவாக்கப்படும் நடைமுறைக்கு வராமலே அழிவதையும் யாராலும் தடுக்கவோ ,,தவிர்க்கவோ முடியாது . உலக நடைமுறைகள் அறியாத அறிவிலிகள் திருத்தவோ திருத்தவோ வாய்ப்பில்லை. பிறப்பு .. இருப்பு ..இறப்பு எனும் மானிட வாழ்வை உணராத ஜென்மங்கள் வாழ்ந்து மடிவதில் பயனில்லை ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X