பொது செய்தி

இந்தியா

காவிரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் இன்று (ஜூலை.23) மேட்டூர் அணை வந்தது. மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 1500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
23-ஜூலை-201912:57:38 IST Report Abuse
Balakrishnan Kamesh வந்தாயே காவிரியே வந்தாயே வாழியே காவிரியே வாழியே வந்தாயே வந்து எங்கள் நெஞ்சை நிறைத்தாய் தாயே பிறத்த வீடடில் இருந்து ஓடோடி வருகின்றாய் எங்கள் வாழ்வு பிழைத்திட எங்கள் வயிற்று பிணி போக்கிட ஓடோடி வந்தாய் ஓடோடி வருகின்றாய் உமது குழந்தைகள் வாடி வதங்கியதை காணமுடியாமல் வந்தாயே நீ வாழிய வாழியே காவிரியே உன்னை கண்டவுடன் என்ன பரவசம் குழந்தையாகிப்போனேனே ஓடியாடி ஆற்றில் குதித்து சொல்லமுடியாத பேரானந்தம் கண்டேனே காவிரியே நீ இல்லாமல் சோர்வுடன் இருந்தோமே நீ வந்தவுடன் எந்த சோர்வும் இல்லையே புதுபொலிவு கொள்கிறதே நீ பாயும் இடமெல்லாம் வாழிய காவிரி வாழியே காய்ந்த வயல்வரப்பெல்லாம் நீ பைய பைய போகையிலே உன்னோடு நானும் வருகிறேன் நீ வளைந்து நெளிந்து செல்லும் அழகைக் காண காவிரியே நீ பரந்து விரிந்து தெரிகையிலே கடலை காண்பதாய் தெரிகிறதே உன்னை வண்ணவண்ண மலர்களை கொண்டு வரவேற்கிறோம் குடகுமலையை பிறப்பிடமாய் கொண்டவளே வாழிய வாழியவே காவிரியே
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
23-ஜூலை-201912:00:43 IST Report Abuse
SaiBaba அந்த ஊர் மக்களுக்குத் தெரியாமல் நீரைத் திறந்து விடலாம். இந்த ஊர் மக்களுக்கு வந்தது தெரியாமல் விநியோகம் செய்யலாம். இந்த அலப்பறைகளால் தான் 70 வருடங்களாக இவ்வளவு கஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
23-ஜூலை-201911:07:09 IST Report Abuse
Raghuraman Narayanan நதி நீரை தேக்கி அதை பயனுள்ள வகையில் உபயோகப் படுத்துவது என்பது நல்ல விஷயம். அதைதான் இந்த அரசாங்கம் செய்ய வேண்டும். அரசாங்கம் இதை செய்ய முடியாவிடில் தனியார் வசம் இந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு கண்காணிக்கும் பணியில் மட்டும் ஈடு பட வேண்டும். அரசுக்கு பணமும் கிடைக்கும் மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். ஆனால் எல்லா நதி நீர்களும் கடலில் கலக்கா விடில் நமக்கு எப்படி மழை வரும்? யோசிக்க வேண்டிய விஷயம். வற்றா நதிகள் வற்றும் நதிகள் என பிரித்து அதற்கேற்பவாறு திட்டமிட்டால் முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X