பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஜூலை 23, 2019
Advertisement

பள்ளி கழிப்பறையை சீரமைக்க வேண்டும்: தலைவாசல், நத்தக்கரை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கழிப்பறை வசதி இருந்தும், பராமரிப்பு இல்லாததால், பயன்பாடின்றி உள்ளது. கதவு, தண்ணீர் வசதியில்லாததால், மாணவ, மாணவியர் திறந்த வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். மாணவியர் வெளியே செல்ல தயங்குகின்றனர். பள்ளியில் உள்ள கழிப்பறையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- க.பிரகாஷ், நத்தக்கரை.

கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்: இளம்பிள்ளை ஏரி பகுதியில் சுகாதாரத்தை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இப்பகுதியில் எந்த நேரமும் கொசுக்கள் படையெடுப்பதால், மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் அடிக்கவும் வீதிகளில் கொசு மருந்து அடிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சபாபதி, இளம்பிள்ளை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X