பொது செய்தி

இந்தியா

அபியின் விமான சாகசம்: வீடியோ கேமில் பரவசம்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : இந்திய விமானப்படையின் வீரசாகசம் மிக்க வீடியோ கேம் வரும் ஜூலை 31 ல் வெளியிடப்பட உள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட டீசர் இந்திய இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


ஹீரோ அபிநந்தன் :


விமானப்படை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், இந்தியாவின் அதிநவீன போர்விமானங்களில் சென்று, எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து அவர்களது விமானங்களை சிதறடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 101 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ, இந்திய விானப்படை வீரர் அபிநந்தன், பாக்கிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி 60 மணி நேரம், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்து பின்னர் மீண்டார்.


தனி நபர் விளையாட்டு :


அதன் பின்னர் இந்திய இளைஞர்களிடம் ஹீரோவான அபிநந்தனே, இந்த வீடியோ கேமிலும் காட்டப்படுகிறார். இப்போது தனிநபர்கள் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில், பலர் இணைந்து விளையாடும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


32 ஆயிரம் பேர் ஆர்வம் :


இந்திய விமானப்படையின் டுவிட்டர் தளத்தில், கடந்த ஜூலை 20 அன்று இந்த வெளியிடப்பட்ட டீசர், ஜூலை 22 மாலை வரையில் 32 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்தி 752 லைக்குகளை பெற்றுள்ளது. தற்போது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் வகை மொபைல் போன்களில் ஜூலை 31ல் வெளியிடப்பட உள்ள வீடியோ கேமை விளையாட முடியும்.


சாகசத்தின் மீதான தாகம் :

ஏற்கனவே, வீடியோ கேம்களை விளையாடுவதில் ஆர்வமுடைய இந்திய இளைஞர்களிடையே விமானப்படையின் இந்த வீடியோ, வீரத்தையும், எதிர்காலத்தில் ராணுவத்தில் இணைந்து சாகசத்தில் ஈடுபடவேண்டும் என்ற தாகத்தையும் உருவாக்கும் என்று விமானப்படை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-201915:26:32 IST Report Abuse
Sriniwasen Vk please do your duty to save us.. dont entertain us thanks
Rate this:
Share this comment
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201914:11:20 IST Report Abuse
susainathan ashamed for armies because of this game
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஜூலை-201913:18:54 IST Report Abuse
DSM .S/o PLM அதிநவீன விமானமா .. அதை இனிமே தானே வாங்க போறோம்.. அவரு ஓட்டை உடைசல் மிக் விமானத்தை எடுத்து போனாரு.. ஒருவேளை அதிநவீன விமானத்தை எடுத்து போயிருந்தா அவரு பிடி பட்டிருக்க மாட்டாரு.. கதையே வேறு மாதிரி போயிருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X