ஆந்திர வேலை ஆந்திரருக்கே: ஜெகன் அதிரடி| Dinamalar

ஆந்திர வேலை ஆந்திரருக்கே: ஜெகன் அதிரடி

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (119)
Share

ஐதராபாத் : நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நேற்று (ஜூலை 22) நிறைவேற்றியுள்ளது.



latest tamil news



உள்ளூர் வேலைவாய்ப்பு :


இந்த மசோதாவின் படி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ள பணிகளில் 75 சதவீதத்தை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


latest tamil news



திறன் பயிற்சி தரவேண்டும் :

உள்ளூர் பணியாளர்களக்கு திறன் இல்லை எனக் கூறி அதிகப்படியாக வெளி ஆட்களை பணிக்கு எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாறாக திறமையற்றவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



நாட்டில் முதல் முறை :

நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில், இப்படி ஓர் மசோதாவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றி இருப்பது நாடுமுழுக்க கவனம் பெற்றுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X