பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (10)
Advertisement

காஞ்சிபுரம் : இப்போது சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 17 வரையில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என்று காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.






பச்சைப் பட்டு :


காஞ்சிபுரத்தில், இருபத்தி மூன்றாவது நாளான இன்று (ஜூலை 23), அத்திவரதர் பச்சை பட்டு உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது முதல், தற்போது வரை ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.





முதல்வர் தரிசனம் :

இதனிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதால், கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், விஐபி தரிசனத்தில் முதல்வர், தரிசனம் முடித்து, அதே வழியில் வெளியே செல்வதால், பக்தர்கள் பொது தரிசனத்தில், வழக்கம்போல் செல்லலாம் என்று, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





நான்கு வரிசை ; 32 லட்சம் பேர்

அத்திவரதரை இதுவரை 31 லட்சத்து 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதுடன், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர், மற்றும் குழந்தையுடன் வருபவர்களுக்கு, நேரடியாக செல்ல தனிவழியும், மற்ற பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு, நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





ஆறுமணி நேரம் காத்திருப்பு :

நெரிசலை தவிர்க்க, கோயில் உட்பிரகாரத்தில் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று முதல்முறையாக 6 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
23-ஜூலை-201918:54:33 IST Report Abuse
chander படுக்க வச்சி கலக்சன் முடிஞ்சி போச்சி இனி நிக்க வைச்சி நடக்கபோகுதா
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-ஜூலை-201917:30:41 IST Report Abuse
Anantharaman Srinivasan நின்ற கோலத்தில் இருக்கும் அத்திவரதரை அப்படியே ஊர்வலமாக காஞ்சி மாடவீதிகளில் கொண்டுவந்தால் பல்லாயிர கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று மதுரை கள்ளழகரை தரிசிப்பதைப்போன்று அவதிப்படாமல் தரிசனம் செய்யலாம். தமிழக அரசும் மாவட்டநிர்வாகமும் அறநிலையத்துறையும் சேர்த்து முடிவெடுக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
23-ஜூலை-201916:29:28 IST Report Abuse
vnatarajan அத்திவாரத்தாரின் முகம் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் உள்ளது. இந்த சிலை எப்போது செதுக்கப்பட்டது, யார் செதுக்கினார்கள் என்ற விபரத்தை தினமலர் வெளியிட்டு அந்த சிற்பிக்கு பெருமை சேர்க்கலாமே
Rate this:
Share this comment
Guru - சென்னை,இந்தியா
23-ஜூலை-201916:55:48 IST Report Abuse
Guruபிரம்மன் வடித்ததாக சொல்கிறார்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X