ஆக.,1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (10)
Share

காஞ்சிபுரம் : இப்போது சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 17 வரையில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என்று காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



latest tamil news



பச்சைப் பட்டு :


காஞ்சிபுரத்தில், இருபத்தி மூன்றாவது நாளான இன்று (ஜூலை 23), அத்திவரதர் பச்சை பட்டு உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது முதல், தற்போது வரை ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news



முதல்வர் தரிசனம் :

இதனிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதால், கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், விஐபி தரிசனத்தில் முதல்வர், தரிசனம் முடித்து, அதே வழியில் வெளியே செல்வதால், பக்தர்கள் பொது தரிசனத்தில், வழக்கம்போல் செல்லலாம் என்று, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



நான்கு வரிசை ; 32 லட்சம் பேர்

அத்திவரதரை இதுவரை 31 லட்சத்து 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதுடன், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர், மற்றும் குழந்தையுடன் வருபவர்களுக்கு, நேரடியாக செல்ல தனிவழியும், மற்ற பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு, நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



ஆறுமணி நேரம் காத்திருப்பு :

நெரிசலை தவிர்க்க, கோயில் உட்பிரகாரத்தில் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று முதல்முறையாக 6 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X