பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி, கோவைக்கு கனமழை

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
நீலகிரி, கோவை, கனமழை, மேகமூட்டம், சென்னை வானிலை மையம், அறிக்கை, சின்னக்கல்லார்,தேவாலா

சென்னை : தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அம்மையத்தின் அறிக்கையில், '' அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் இலேசானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்துள்ளதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்.

கடந்த 24 மணிநேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ., மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்று தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Vardhini - Coimbatore,இந்தியா
23-ஜூலை-201918:30:06 IST Report Abuse
Raja Vardhini இப்படித்தான், கடந்த இரண்டு மாத காலமாக, கோவையில் கனமழை, மிதமான மழை என்று தினந்தோறும் வானிலை அறிக்கை வெளியாகி கொண்டிருக்கிறது.. சொன்ன படி ஒரு நாள் கூட கோவையில் மழை பெய்யவில்லை. இந்த பொய்யான அறிவிப்புக்கு நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள், அதற்கு ஒரு அலுவலகம், ஆஆபீசர்கள் வேறு.... சிரிப்புதான் வருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X