மக்களை ஏமாற்றுவதா? ராகுல் கேள்வி

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது உண்மையானால், இது மக்களை ஏமாற்றும் செயல் என பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கி பேசியுள்ளார்.






பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்று டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் டிரம்ப், காஷ்மீர் குறித்து கூறிய கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் பார்லி.,யிலும் இன்று எதிரொலித்தது.
இது தொடர்பாக சமீபத்தில் காங்., தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ள ராகுல் அவரது டுவிட்டரில்;





காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சில் டிரம்பை தலையிட மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் பலவீனமான வெளியுறவு துறை இதனை இல்லை என மறுக்கிறது.
இது உண்மையாக இருக்குமானால் 1972 சிம்லா ஒப்பந்தப்படி மோடி நடக்கவில்லை. மேலும் அவர் மக்களை ஏமாற்றி உள்ளார். டிரம்ப் உடன் நடந்த சந்திப்பில் மோடி பேசியது என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
23-ஜூலை-201920:47:17 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam As a responsible Indian he should've accepted what the foreign minister said in the loksabha.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜூலை-201919:44:27 IST Report Abuse
blocked user சிம்லா ஒப்பந்தத்தால் என்ன கிழித்தார்கள்? அதை முதலில் காங்கிரஸ் விளக்கவேண்டும். வெளியுறவுத்துறை தெளிவாக அறிக்கை விட்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூலை-201918:19:25 IST Report Abuse
Thiagu மக்களை ஏமாற்றுவது திமுக மற்றும் காங்கிரஸ் கொம்பனியின் குடும்ப சொத்து. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X