பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு: ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Added : ஜூலை 23, 2019
Advertisement

பென்னாகரம்: கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள மாண்டி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை தொடர்ந்தும், கார்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த, 16ல் வினாடிக்கு, 850 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, மொத்தம், 11 ஆயிரத்து, 700 கன அடியாக, திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தடைந்தது. அங்குள்ள, மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு, 500 கன அடியாக வந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அது மேலும் அதிகரித்து, மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், வறண்டிருந்த ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X