குஷிப்படுத்திய அமித்ஷா: உசுப்பேறிய நிதிஷ்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: பீகாரில், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் பிளவு ஏற்படுவது போல் தெரிகிறது. ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் தலையிட்டு பிளவை சரி செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், பா.ஜ.,வை சேர்ந்த துணை முதல்வர் சுஷில்குமார் மோடிக்குமான நட்பின் மூலம், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கும் கூட்டணி தொடர்வதை உறுதி செய்துள்ளார்.latest tamil news
இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் 2020 சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தான் தேர்தலை சந்திக்கும் என்று துணை முதல்வர் சுஷில்குமார் மோடி அறிவித்தார். இது சமீபத்தில் இரு கட்சிகளுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகளை தணித்தது.


latest tamil news

நட்பு தான் கூட்டணிக்கு அச்சாணி :

கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பீகாரில், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளிடையே சில பிரச்னைகள் நிலவி வந்தன. ஆனால், சுஷில்குமார் மோடியும், நிதிஷ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த இணைபிரியாத நட்பு தான், கடந்த காலங்களிலும் கூட்டணியில் எழுந்த பதற்றங்களை தணிக்க உதவியது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சில இடங்களை விட்டுத் தந்ததற்கும், அதன் மூலம் இரு கட்சிகளுமே தேர்தல் பலன் அடைந்ததற்கும் இந்த இரு தலைவர்களின் நட்பு மட்டுமே காரணியாக அமைந்தது.


லோக்சபா தேர்தலுக்கு பின்...


லோக்சபா தேர்லுக்கு பின்னர் மத்திய அரசில் சேராமல், வெளியிலிருந்து ஆதரிப்பது என்று நிதிஷ் எடுத்த முடிவின் காரணமாக கூட்டணியில் இறுக்கமான நிலை ஏற்பட்டது. அதே வேகத்தில் பீகார் அரசிலும் 8 புதிய அமைச்சர்களை நிதிஷ் தனது கட்சியிலிருந்தே நியமித்தார். இப்போதுவரை அமைச்சரவை விரிவாக்கத்தில் பா.ஜ.,வை சேர்க்கவில்லை.


latest tamil news
இந்த மாதம் பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பின்புலம் குறித்த அறிக்கையை போலீசாரிடம் உளவுப்பிரிவு கேட்டிருந்தது. இது பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை கோபமூட்டியது. ஏனெனில், போலீஸ்துறையை நிதிஷ் தான் கையில் வைத்துள்ளார்.

அதே நேரம் இது வழக்கமான ஒன்றுதான் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சமாளித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமாருக்கு நெருங்கியவரான முன்னாள் ராஜ்யசபா எம்.பி., பவன் வர்மா, வரும் 2020 தேர்தலில், பா.ஜ., தனது சொந்த பலத்தில் தனித்து நிற்கமுடியுமா என்றும் சவால் விடுத்திருந்தார். ஏனெனில், முன்னதாக நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள மூத்த தலைவர்களில் ஒருவரான அப்துல் பாரி சித்திக் உடன் ரகசியமாக பேசியுள்ளார்.


latest tamil news

லாலு எம்.எல்.ஏ.,க்கள் கைகோர்ப்பா?


இதனிடையே, லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.,க்கள் பலர், நிதிஷ்குமார் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நிதிஷோடு இணையவோ அல்லது அரசுக்கு ஆதரவளிக்கவோ உள்ளதாக கூறப்படுகிறது.

லாலு கட்சிக்கு பீகார் சட்டசபையில் 81 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட தனிப்பெரும் கட்சி. அதே நேரத்தில் 243 பேர் கொண்ட சட்டமன்றத்தில் நிதிஷ் கட்சிக்கு 70 பேர் தான் உள்ளனர். அதே நேரத்தில், தே.ஜ., கூட்டணியில் நிதிஷ் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் 27 எம்.எல்.ஏ.,க்களும் நிதிஷூடன் இணக்கமாகவே உள்ளனர்.

லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ஒரு லோக்சபா தொகுதியை கூட வெல்ல முடியாததால் சில ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.


latest tamil news

அமித்ஷா வியூகம் :


ஆனால் நிதிஷ்குமார் உடனான கூட்டணியை உறுதி செய்ய அமித்ஷா வியூகம் வகுத்துள்ளார். 68 வயதான நிதிஷ், மீண்டும் ஒருமுறை முதல்வராக விரும்புவார் என்பதே அமித்ஷாவின் கணக்கு. எனவே தான், வரும் 2020 சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தான், தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மூலம் அறிவித்துள்ளார் என்கின்றனர்.

இதன்மூலம், மீண்டும் முதல்வர் ஆகிவிடலாம் என்று நிதிஷை, அவரது நண்பர் சுஷில்குமார் மூலம் குஷிப்படுத்தி உள்ளது, பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201903:52:19 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்கள் இணைந்தால்தான் நாட்டு வளர்ச்சி.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஜூலை-201900:27:28 IST Report Abuse
Pugazh V 195 கோடி லஞ்சம் வாங்கி வைத்திருக்கும் பாஜக.. ஓ..ஸாரி.. நன்கொடை வாங்கி வைத்திருக்கும் பாஜக அதிகாரவெறி பிடித்து அலைவதில் ஆச்சரியம் இல்லை.
Rate this:
sivan - seyyur,இந்தியா
24-ஜூலை-201907:14:46 IST Report Abuse
sivan கவனம் பேச்சில் வார்த்தையில் கவனம் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் ஒரு கட்சி .....
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-ஜூலை-201917:06:38 IST Report Abuse
Anantharaman Srinivasan அரசியலில் பிரச்சினைகள் எல்லாமே எப்பொழுதும் பதவிக்கும் பணத்துக்கும்தான். பிஜேபி இடம்தான் கொட்டிக்கிடக்கிறதே.. கொடுத்து சரிசெய்துவிட்டால் சமாதானம் ஆகிவிடுவர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X