லல்லு மகனின் 'லொள்ளு'

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (17)
Advertisement

பாட்னா : பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன், கோவிலுக்குள் சிவபெருமான் வேடமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


சிறையில் லாலு :


பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதன் தலைவரான முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், தற்போது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் உள்ளார். அங்குள்ள சிறை மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேஜஸ்வி தலைவர் :

எனவே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பதவியில் உள்ளார். ஆனால், லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

சிவன் வேடமிட்ட லாலு மகன் :

இன்று ( ஜூலை 23) பாட்னாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்ற தேஜ்பிரதாப் யாதவ் அங்குள்ள கோயிலில், சிவபெருமான் போல வேடமிட்டு பூஜை செய்துள்ளார். கோவிலுக்குள்ளேயே கடவுளைப் போல வேடமிட்டுக்கொள்ள அனுமதி உண்டா, இது ஆகம விதிகளை மீறியது ஆகாதா என்று பீகாரில் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagaraj Easwaran - Aizawl,இந்தியா
24-ஜூலை-201913:32:50 IST Report Abuse
Kanagaraj Easwaran சிவோஹம் பாவனையிலே சிவபூஜை செய்யவேண்டும் என்று வேதம் ஆகமம் இரண்டுமே தெளிவாக சொல்கின்றன. சிவனாகி சிவனை பூஜிப்பாய் மனமே என்று வீரசைவ அருளாளர் சித்தராமர் சொல்வார். விபூதி ருத்ராக்ஷம் ஜடாமுடி, லிங்கதாரணம் போன்றவற்றை அணிவது கூட சிவ வேடம் என்றே சாத்திரங்கள் கூறுகின்றன. அத்தகையவர்களை சிவனாகவே கருதி சிவபக்தர்கள் மரியாதை செலுத்துவது சைவ மரபு ஆகும். ஆகவே சிவவேடம் புனைந்து தேஜ் பிரதாப் யாதவ் பூஜை செய்வது வரவேற்கத்தக்கது. அவரைப்பலரும் பின்பற்றலாம். சிவபக்தர்கள் யாராயினும் மதித்துப்போற்றத்தக்கவர்களே. லாலுவின் புத்திரரும் இதற்கு விலக்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
24-ஜூலை-201908:42:31 IST Report Abuse
Balaji கிருஷ்ணா ஜெயந்தி அன்னைக்கு கொழந்தைகளுக்கு வேஷம் போட்றதில்லயா என்ன? அப்புடியே கோவிலுக்கு கூட்டிட்டு போறதில்லயா என்ன? இவரை பூசை செய்திருந்தால் அது விமர்சிக்க தக்கது. இவர் வேஷம் கட்டி பூசை செய்வதை எந்த வேதமும் ஆகமமும் குறை சொல்லு என்று எனக்கு தோன்றவில்லை. உணர்ச்சிவசப்பட்டு என்ன வசை பாடுவதை விட்டு உண்மையை உணர முயற்சிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
24-ஜூலை-201902:56:59 IST Report Abuse
Subramanian Arunachalam ivar enna seithalum adhu kutram illai . ivar oru madha sarbatra adhavathu indhu madha sarbatra arasiyal kudumbathai sernthavar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X