தேசிய குடிமக்கள் பதிவு இறுதி வரைவு : உச்சநீதிமன்றம் கெடு

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
SC,  Deadline, Assam NRC,தேசிய குடிமக்கள் பதிவு, உச்சநீதிமன்றம் கெடு

கவுகாத்தி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு இறுதி பட்டியலை வெளியிட ஆக.31-ம் தேதி வரை கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் உண்மையான இந்தியர்கள் யார் என்பதை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. 31 லட்சம் பேர் தங்களது பெயரை சேர்க்க மனு அளித்துள்ளனர். குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.


முழுமையாக ஆய்வு செய்து தேசிய குடிமக்கள் பதிவு வரை இறுதி பட்டியலை வெளியிட கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு, அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஏறகனவே வெளியிடப்பட்ட வரைவுபட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வருவதால், முழுமையாக முடிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து ஆக.31-ம் தேதிவரை அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201902:59:36 IST Report Abuse
rajesh all Bangladesh guys who illegallly immigrated, already got Aadhar card, pan card . hope some even got passport......
Rate this:
Share this comment
Cancel
PARTHIBAN - chennai,இந்தியா
23-ஜூலை-201919:59:19 IST Report Abuse
PARTHIBAN இந்த பட்டியலில் நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயர் இருக்குமா???
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
24-ஜூலை-201906:41:46 IST Report Abuse
sivan எந்த பட்டியலில்? ஒரிஜினல் பட்டியலிலா? அல்லது விடுபட்ட பட்டியலிலா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X