பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூலை 24, 1924 பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன்:

திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். நடராஜன் என்பவரிடம், முறையாக இசை பயின்றார். சிறுவயதில், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். இவர், 'வாராய் நீ வாராய்...' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். மாயா பஜார் என்ற படத்தில், 'கல்யாண சமையல் சாதம்...' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியவர்.திருச்சி லோகநாதன், சம்பள விஷயத்தில் கறார் பேர் வழி. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி படத்தில் இடம்பெற்ற, எட்டு பாடல்களையும் பாட, வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடலுக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள், சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தினர். அப்போது, 'மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்; அவரை பாடச் சொல்லுங்கள்' என கூறி விட்டார், திருச்சி லோகநாதன். அவர் சுட்டிக்காட்டிய,டி.எம்.சவுந்தரராஜன், சகாப்தமாக உருவாகினார். திருச்சி லோகநாதன், 1989 நவ., 17ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201907:10:48 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆசையே அலை போல நாமெல்லாம் அதன்மீது என்று ஒருபாட்டும் நன்னாயிருக்கும் பல பாடல்களை அன்று சிலோன் ரேடியோளே கேட்டு ரசித்துருக்கேன் இப்போதும்கூட சிலகுழந்தைகள் இவர்பாடல்களை அவ்ளோ அழகா சூப்பர் சிங்கர் லே பாடுறாங்க (ஜூ னியர்ஸ் லே ) சீனியர்ஸ்லே யாரும் பாடலே என்று எண்ணுகிறேன் இவரை பிள்ளளைகளும் நன்னாபாடுறாங்க பக்திப்பாடல்களை கேட்ப்பதுண்டு விநாயகர் அகவல் அவ்ளோ சிறப்பாக பாடிருக்கார் தி எல் மகராஜன் என்று எண்ணுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X