பட்டுப்போன மரங்களை அகற்றி புது மரக்கன்று நடவு செய்யணும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்போன மரங்களை அகற்றி புது மரக்கன்று நடவு செய்யணும்

Added : ஜூலை 23, 2019
Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, பட்டுப்போன ரோட்டோர மரங்களை அகற்ற வேண்டும்; அதற்கு மாற்றாக புது மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.பொள்ளாச்சியில், ரோட்டோரத்தில் நிழல் தரும் மரங்கள் உள்ளன. அவற்றில் பல மரங்கள் மின்பாதை சீரமைப்பு, போக்குவரத்துக்கு இடையூறு என பல்வேறு காரணங்களை கூறி, கிளைகளை வெட்டி விட்டுள்ளனர்.
வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்க்காமல், பட்டுப்போயுள்ளன.நாளடைவில் மரங்களின் வேர்கள் பலமிழந்து, சாயும் நிலையில் காணப்படுகின்றன. தற்போது மழையுடன் காற்றும் வீசுவதால், பலவீனமான பட்டுப் போன மரங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பாதுகாப்பு கருதி, காய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். தற்போது பெய்யும் மழையில், மரக்கன்றுகள் எளிதில் வேர் பிடித்து வளர்ந்து விடும் என்பதால், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.இதற்கு நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X