பொது செய்தி

தமிழ்நாடு

விடுதிகளில் கேமரா பொருத்தவில்லை: அலட்சியம் வேண்டாமென 'அட்வைஸ்'

Added : ஜூலை 23, 2019
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில், குற்ற சம்பவங்களை தடுக்க, தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.சுற்றுலாபயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், 'ரிசார்ட்' மற்றும் தங்கும் விடுதிகள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, எஸ்.பி., உத்தரவின் பேரில், வால்பாறையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் 'ரிசார்ட்'களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில், இன்று வரை கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை. இதனால், விடுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.இதனிடையே, வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் நடந்தது. ஆனால் போலீசார் அறிவுறுத்தியது போன்று, இன்று வரை யாரும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.
போலீசார் கூறுகையில், 'வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதன் விபரத்தினை போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். வியாபாரிகள் ஒத்துழைப்புடன் வால்பாறை நகரில், 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.மேலும், நகரில் நடக்கும் திருட்டு, போக்குவரத்து பாதிப்பு, அதிவேகமாக வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க கேமரா பொருத்துவது மிகவும் அவசியமாகிறது. கேமரா பொருத்துவதில் இனியும் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X