அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதை விட பெரிய வெற்றி: ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை:''லோக்சபா தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற்றது; அதைவிட, பல மடங்கு வித்தியாசத்தில், வேலுார் தொகுதியிலும், வெற்றி பெறுவோம்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.

பெரிய வெற்றி,ஸ்டாலின்,நம்பிக்கை


அவரது பேட்டி: சென்னை, கொளத்துார் தொகுதி, வீனஸ் நகரில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையமும், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 97 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய, நுாலகமும் திறந்து வைத்துள்ளேன். ஹரிதாஸ் நகர் பகுதி மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான தாமரைக்குளத்தை சீர்ப்படுத்தி, வெளிநாடுகளில் இருப்பது போன்ற,

ஒரு அமைப்பை உருவாக்கியதற்கு, மக்கள் மனம் திறந்து பாராட்டி உள்ளனர்.

என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 82 லட்சம் ரூபாய் செலவுசெய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 74 பேருக்கு, கல்வி உதவித் தொகையை வழங்கி உள்ளோம். 'அனிதா அச்சிவர்ஸ் அகாடமி' என்ற அமைப்பின் சார்பில் பயிற்சி பெற்ற, 61 பேருக்கு, பல்வேறு தொழிற்கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில், எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றோமோ, அதைவிட பல மடங்கு, ஓட்டுக்கள் வித்தியாசத்தில், வேலுார் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு,ஸ்டாலின் கூறினார்.

அன்பழகனுக்கு அழைப்பு


தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை, அக்கட்சி தலைவர் ஸ்டாலின்,

Advertisement

நேற்று சந்தித்து, கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்கினார். கருணாநிதியின் நண்பரும், கட்சி பொதுச்செயலருமான அன்பழகன், 95, உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக, தன் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சில மாதங்களாக, கட்சி நிகழ்ச்சிகள், விழாக்களில், அவர் பங்கேற்பதில்லை.

இந்நிலையில், சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள, அன்பழகன் வீட்டுக்கு, நேற்று ஸ்டாலின் சென்றார். அங்கு, அன்பழகனிடம், அடுத்த மாதம், 7ம் தேதி, முரசொலி அலுவலக வளாகத்தில் நடக்கும், கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்கி, அழைப்பு விடுத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
24-ஜூலை-201918:40:48 IST Report Abuse

Gopiஒரே தமாசு போங்க. நீங்க பாட்டுக்கு வேட்டைக்கு போறீங்க, வெற்றி பெற்று மணிமகுடம், குதிரை சவாரி செய்து வீட்டுக்கு திரும்புறீங்க. ஆனால் அரியணையை காணோம். என்ன கொடுமை

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூலை-201916:42:49 IST Report Abuse

RajanRajanமக்கள் வரி பணத்தை சுருட்டி ஊழலுக்கு மரியாதை செலுத்தி ஊழலுக்கு அதே மக்கள் வரி பணத்தை ஊதாரித்தன செலவு பண்ணி சிலை வடிக்கும் இந்த கூட்டம் நம்மை ஆள வேண்டுமா. சிந்தியுங்கள் மக்களே. சிலை வடிப்பது ரொம்ப முக்கியம் பாரு.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-ஜூலை-201916:31:01 IST Report Abuse

oceஅய்யா மக்களுக்கு அதை செய்தோம் இதை கொடுத்தோம் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். எந்த மக்களாவது தானாக கூட்டமாக சேர்ந்து வந்து மேடை ஏறி நீங்கள் சொன்ன தெல்லாம் உண்மை என்று சொல்லி இருக்கிறார்களா.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X