பொது செய்தி

தமிழ்நாடு

மனநல திறன் மேம்பாட்டு பயிற்சி : பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு

Added : ஜூலை 23, 2019
Advertisement
 மனநல திறன் மேம்பாட்டு பயிற்சி : பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு, மனநல வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.கோவை மாவட்ட மன நலத்திட்டம் சார்பில், பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, மூன்று நாட்கள் மன நல வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.மனநல டாக்டர் கிருத்திகா, மனநல ஆற்றுநர் சிவா, தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் வேதியப்பன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
மனநல டாக்டர் கிருத்திகா மற்றும் மனநல ஆற்றுநர் சிவா கூறியதாவது:கோவை மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்காக மொத்தம், ஏழு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரண்டு பயிற்சிகளும்; மற்ற பயிற்சிகள் கோவை மாவட்டத்திலும் நடத்தப்படுகின்றன.பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்பிக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.முதலில், சுய விழிப்புணர்வு அவசியமாகும். ஒவ்வொருவரும் தன்னை பற்றிய புரிதல் வேண்டும். குணம், வலிமை, பலமின்மை, விருப்பம், விருப்பமின்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதன்பின், தன்னை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். மற்றவர்களின் உணர்வுகள், பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும்.பிரச்னை வரும் போது, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.குறைவாக, அமைதியாக, இனிமையாக பேச வேண்டும். குரல்களை உயர்த்தி பேசக்கூடாது. மற்றவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.மாணவர்கள் மனநிலை அறிந்து நல்வழிப்படுத்த வேண்டும். இதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X