ஊழலற்ற அரசு

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019
Advertisement
  ஊழலற்ற அரசு

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறிதும் ஊழலற்ற அரசாக உள்ளது. உணவுபதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில், ஊழல் புகார் என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்ற துறைகளிலும் ஊழலை ஒழிக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், அகாலிதளம்.
கட்டாய ஓய்வு
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். பணி செய்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளுக்கு, கட்டாய ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கையை, எதிர்கொள்ள வேண்டும்.
திரிவேந்திர சிங் ராவத், உத்தரகண்ட் முதல்வர்., பா.ஜ.,
ஆய்வு செய்யும்
இடஒதுக்கீடு பட்டியலில், சில பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடம் பெற்றிருந்தும், அவர்களுக்கு பல துறைகளில், சமமான பலன் கிடைப்பதில்லை என, எம்.பி.,க்கள் பலர் தெரிவித்துள்ளனர். இது பற்றி அரசு நிச்சயம் ஆய்வு செய்யும். இடஒதுக்கீட்டின் பலனை, சம்பந்தப்பட்ட அனைவருக்கும், சமமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரத்தன் லால் கட்டாரியா, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X