பார்லி.,யில் நேற்று

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 23, 2019
Share
Advertisement

கறுப்புப் பணம் எவ்வளவு?
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, கடந்த, ஐந்து ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக பல்வேறு சட்டங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதிக ரொக்கம் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது என்பதற்கான எந்த ஒரு அதிகாரப் பூர்வமான புள்ளிவிபரமும் அரசிடம் இல்லை.- ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, நிதித் துறை இணைஅமைச்சர் அனுராக் தாக்குர், எழுத்து மூலம் அளித்துள்ள பதில்.


272 வெளிநாட்டவருக்கு பத்ம விருதுகள்


வெளிநாட்டவர், வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என, 272 பேருக்கு, கடந்த, 1954ல் இருந்து பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. பத்ம விருதுகள் வழங்குவதில், ஜாதி, மதம், இனம், பாலின பேதம் பார்க்கப்படுவதில்லை.- லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதில்.


பயங்கரவாத சம்பவங்கள் குறைவு


கடந்த, 2009, ஏப்., 1 முதல், 2019, ஜூன், 30 வரையிலான, 10 ஆண்டுகளில், முந்தைய, 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில், பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில், 23,290 ஆக இருந்த பயங்கரவாத சம்பவங்கள், 3,187ஆக குறைந்து உள்ளன. இது, 86 சதவீதம் குறைவாகும். நாட்டின் மற்ற பகுதிகளில், 71ல் இருந்து, 21ஆக குறைந்துள்ளது. இது, 70 சதவீதம் குறைவு.- உள்துறை இணையமைச்சர், ஜி.கிஷண் ரெட்டி, லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதில்.


ரூ.15 ஆயிரம் கோடி நிலுவை

அக்., முதல் செப்., வரையிலான காலம், கரும்பு வர்த்தக ஆண்டாக கருதப்படுகிறது. நடப்பு, 2018 - 19 வர்த்தக ஆண்டில், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை, 15,222 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்க்கரை உற்பத்தி அதிகரித்தது மற்றும் விலை குறைந்தது போன்ற காரணங்களால், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை உயர்ந்துள்ளது.- லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், உணவுத் துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான்.


கடத்தல் மாடுகள் மீட்பு

மேற்கு வங்கத்தில் இருந்து, அண்டை நாடான வங்கதேசத்திற்கு அதிகளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன. கடந்த, 2016ல், 1 லட்சத்து, 30 ஆயிரத்து 221 மாடுகளை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் எஸ்.எஸ்.பி., எனப்படும் எல்லை ஆயுதப் படை மீட்டுள்ளன. கடந்த, 2017ல், 88 ஆயிரத்து, 365; 2018ல், 52 ஆயிரத்து,284 மாடுகள் மீட்கப்பட்டன. இந்தாண்டில் இதுவரை, 23 ஆயிரத்து, 869 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.
- லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, கால்நடை பராமரிப்பு துறை இணைச்சர், சஞ்சீவ் குமார் பால்யான் அளித்துள்ள பதில்.


பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட்டுக்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. லோக்சபாவில் கடந்த வாரம் ஒப்புதல் தரப்பட்டது. ராஜ்யசபாவில் நேற்று இதற்கான மசோதாக்கள், குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X