தனியார் துறையில் 75 சதவீத இட ஒதுக்கீடு: ஆந்திர சட்டசபையில் மசோதா தாக்கல்

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமராவதி:தனியார் துறைகளில்,75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகை செய்யும் மசோதா, ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில், முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஓய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது.இங்கே, மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பான மசோதா, நேற்று முன்தினம், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.பயிற்சி மையங்கள்'மாநிலத்தில், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில், 75 சதவீத பணிகளை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்.'உள்ளூர் இளைஞர்களுக்கு திறன் இல்லை எனக் கூறி, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை, அதிகளவில் நியமிக்க கூடாது; திறன் இல்லாதவர்களுக்கு, அரசின் தொழிற் பயிற்சி மையங்கள் வாயிலாக பயிற்சி அளிக்க வேண்டும்' என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை தவிர, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காக நிரந்தர ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா, அரசு ஒப்பந்த பணிகளில், 50 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி. பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதா ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டன.நியமன பதவிமாநில அரசின் நிர்வாக துறையின் கீழ் செயல்படும், ஆணையங்கள், அமைப்புகள், வாரியங்கள், சங்கங்கள், கமிட்டிகள் ஆகியவற்றில், நியமன பதவிகளில், 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதாவும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
24-ஜூலை-201914:13:14 IST Report Abuse
s.rajagopalan சரியாய் போச்சு போகாத ஊருக்கெல்லாம் வழி தேட கிளம்பீட்டாரே ? முதலில் தொழில்கள் துவங்க "முதல்"-க்கு வழி தேடுங்கள். வெறுங்கையை முழம் போட்டு பயனில்லை. சரி இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்தை கண்டு முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடிக்க மாட்டார்களா ? தனியார் முதலீடு "தர்ம சத்திரம் " கட்ட அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X