அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குடிமராமத்து பணி விபரங்கள்
இணையதளத்தில் வெளியீடு:
எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும், குடிமராத்து பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நீர்நிலைகள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள்,கோரிக்கை,ஏற்பு


மாநிலம் முழுவதும் வறட்சியால், ஏரிகள், பாசன கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. இவற்றை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 499 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, 1,829 ஏரிகள் மற்றும் கால்வாய்களில், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளன.

பல மாவட்டங்களில், இந்த பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளில், வெளிப்படை தன்மை இல்லை என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. 'பணிகள் குறித்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என, தி.மு.க., - காங்., தரப்பில், சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., 'குடிமராத்து திட்டப் பணிகள், முறையாக நடந்து வருகின்றன. இதுகுறித்த முழுமையான விபரங்கள், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும்' என, உறுதி அளித்தார்.

இதையடுத்து, பொதுப்பணி துறையின் கீழ் இயங்கி வரும், நீர்வளத்துறையின், www.wrd.tn.gov.in என்ற இணையதளத்தில், 2019 - 20ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இத்தகவல்கள் உள்ளன.இதேபோல, 2016 - 17 மற்றும், 2017 - 18ம் ஆண்டுகளில் நடந்த, குடிமராமத்து பணி விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.பணிகள் முடிந்த பின், அதுகுறித்த புகைப்படங்களை, இணையதளத்தில் வெளியிடவும், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bangaruswamy ("SWAMY") - Mount Druitt, NSW,ஆஸ்திரேலியா
24-ஜூலை-201910:54:39 IST Report Abuse

Bangaruswamy (Bangaruswamy Swaminatha, Formerly United Nations Chief Technical Advisor, UNDP / UNIDO : This exercise should not confine to lakes and canals only. There is a great need (i) to restore the widths of all TN rivers throughout their lengths (ii) make permanent arrangements to acquire / buy a reasonable stretch of additional land area on either side of the rivers beyond the restored width of rivers and (iii) plant native trees and such other weather-friendly conditions on these acquired lands on both sides of the rivers. Such an arrangement will ensure that there will not be any encroachment. This pattern can be followed while formulating policies while linking our rivers as well. The money and effort spent on these developments will be much less when we see the benefits that accrue in the future. It is miserable to watch my river “Thirumalairajan” at Patteeswaram (PIN 612 703) in Kumbakonam Taluk, Thanjavur District that has shrunk to unbelievable extent and the same is the case with respect to many other TN rivers. Social Organisations and the Public should come forward to make this a reality.

Rate this:
venkat - chennai,இந்தியா
24-ஜூலை-201910:35:13 IST Report Abuse

venkatவெளிப்படைத்தன்மையே நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அரசையும் மக்களையும் ஒன்றிணைக்கும். ஊழலை கண்டுபிடிக்க உதவும். செயலாக்கத்தை நீர்நிலைக்கு சொந்தக்காரர்களாகிய பொது மக்கள், காப்பாற்று கடன்பாடுள்ள நீதிமன்றங்கள் கண்காணிக்க உதவும்.முதல்வர் இ பி எஸ் அவர்கள் நீர்நிலை மீட்பு கொள்திறன் அதிகரிப்பு இவற்றிற்கு சில காலமாய் அறிவித்த திட்டங்களை முழுமனத்துடன், முழு வீச்சுடன், திறம்பட, செவ்வனே அதிகாரிகள் செய்து முடிக்கிறார்களா என்பதை மக்கள் சமூக செயற்பாட்டாளர் குழுக்களை உள்ளடக்கி ஈடுபடுத்தி ஒவ்வொரு செலவினங்களை கண்காணிக்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இணையத்தில் செலவின செயல்பாடுகள் அனைத்தும் முன்னும் பின்னும் புகைப்பட காணொளி ஆதாரத்துடன் வெளியிட உத்தரவிட வேண்டும். நீர்நிலை சர்வே எண்களில் பத்திரப்பதிவு நடக்காமல் துறை இணையத்தில் முடக்க வேண்டும். சுதந்திரம் பெற்றபின் அதிகாரிகள் துணையோடு நடந்த எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, மக்கள் சொத்தை பட்டப்பகலில் கொள்ளை சுருட்டிய சமூக விரோதிகளை, துணை போன, காக்கத் தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-ஜூலை-201908:21:34 IST Report Abuse

தமிழ் மைந்தன்இனி வேலுர் தலைவர் பொதுப்பணிதுறை அமைச்சரானாலும் இது போல வெளிப்படையாக செய்யவேண்டும். எனவே ஈபிஎஸ் மீண்டும் ஊழல்கம்பெனிக்கு செருப்படி கொடுத்துள்ளார்....

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X