கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' தேர்வு விலக்கு விவகாரம்:
மத்திய உள்துறை செயலருக்கு உத்தரவு

சென்னை:'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்த, தமிழக அரசின் மசோதாக்கள், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறித்து, மத்திய உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 'நீட்' தேர்வு விலக்கு :  மத்திய உள்துறை செயலர் உத்தரவு

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் - பெற்றோர் நல சங்கம் உட்பட, நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் மனு தாக்கல் செய்தனர்.


அதில், 'தமிழக மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட்நுழைவுத்தேர்வில் இருந்து விலக்களித்து, 2017ல், தமிழக சட்ட சபையில், இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற, நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரினர்.
இந்த வழக்கு, கடந்த வாரம்விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக, 2017 செப்., 22ம் தேதியே, தமிழக அரசுக்கு கடிதம்

Advertisement

எழுதி உள்ளதாக, மத்திய உள்துறை துணை செயலர், ராஜூ எஸ்.வைத்யா, பதில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள், எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுவை படித்த நீதிபதிகள், மத்திய உள்துறை செயலர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை, ஆக., 1க்கு தள்ளி வைக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X