அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'புகார் சொல்லும் பழக்கம் எனக்கு கிடையாது' :
டில்லியில் துணை முதல்வர் மறுப்போ மறுப்பு

புதுடில்லி: ''மத்திய உள்துறை அமைச்சரிடம் யாரைப் பற்றியும் எந்தவிதமான புகாரையும் கூறவில்லை. அதுபோன்ற பழக்கம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது''என தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்வர்,பன்னீர்செல்வம்,அமித் ஷா


திடீர் பயணமாக டில்லி வந்திருந்த தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பா.ஜ. தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவையும் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும்

நேரில் சந்தித்துப் பேசினார்.'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என தெரிவிக்கப்பட்டாலும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே அரசியல் வட்டாரங்கள்கருதுகின்றன.

இந்நிலையில் பன்னீர்செல்வம் நேற்று காலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் நார்த்பிளாக் அலுவலகத்தில் சந்தித்தார். பின் மாலையில் சென்னை கிளம்புவதற்கு முன்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது;

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பல்வேறு புகார்களை கூறியதாக வெளியான செய்திகளில்துளி கூட உண்மையில்லை. யாரைப்பற்றியும் புகார் செய்யும் பழக்கம் என்னிடம் கிடையாது. இது முழுக்க முழுக்க மரியாதை

Advertisement

நிமித்தமான சந்திப்பு மட்டுமே. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி கேட்டு மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். மற்றபடி இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.

யாராக இருந்தாலும் தகுதியும் திறமையும் இருந்து பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்றால் தான் அரசியலில் நீடிக்க முடியும். என் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் இது பொருந்தும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Civilion - Trichy,இந்தியா
30-ஜூலை-201916:19:55 IST Report Abuse

Civilionfirst jaya , sasikala and now modi & amith shah

Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
24-ஜூலை-201913:27:52 IST Report Abuse

Asagh busaghஆமா ஆமா. இவருக்கு காலில விழுந்து புரண்டு கதறி கண்ணீர் விட்டு மட்டும் தான் பழக்கம்.

Rate this:
Mal - Madurai,இந்தியா
24-ஜூலை-201911:45:11 IST Report Abuse

MalNo man who has earned through hard work will sp like this. .. ..

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X