பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

Added : ஜூலை 23, 2019
Advertisement
 பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா மே. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக, பிரிட்டன் முடிவு செய்தது. இதற்கான, 'பிரக்ஸிட்' மசோதா, பிரிட்டன் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட வேண்டும்.இரண்டு முறை, இந்த மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்தும், அது, தோல்வியடைந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக, தெரசா மே, சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையை, தெரசா மேயின், கன்சர்வேடிவ் கட்சி துவங்கியது. பிரிட்டன் பார்லிமென்டில், இந்த கட்சிக்கு தான் பெரும்பான்மை உள்ளது.இந்த கட்சியின் உயர்மட்டக் குழு சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவரே, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.இதன்படி, கட்சியின் மூத்த தலைவர்களான, போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹன்ட், 52, ஆகியோரிடையே, பிரதமர் பதவிக்கு, கடும் போட்டி நிலவியது.இவர்களில், போரிஸ் ஜான்சன், பிரிட்டன் வெளியுறவு அமைச்சராகவும், லண்டன் மேயராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். ஜெரேமி ஹன்ட், தற்போது, வெளியுறவு செயலராக உள்ளார். இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கு, ஓட்டளித்தனர்.இதில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், போரிஸ் ஜான்சன், 92 ஆயிரத்து, 153 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். ஜேரேமி ஹன்டுக்கு, 46 ஆயிரத்து, 656 ஓட்டுகள் கிடைத்தன.
தற்போதைய பிரதமர் தெரசா மே, தன் ராஜினாமா கடிதத்தை, பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் கொடுத்த பின் தான், போரிஸ் ஜான்சன், பிரதமராக பதவியேற்க முடியும். தெரசா மே, பதவியை எப்போது ராஜினாமா செய்வார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ள, போரிஸ் ஜான்சன் கூறியதாவது:பிரிட்டனில், மக்களின் ஆதரவு, தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சிக்கு தான் உள்ளது. எங்களின் வாக்குறுதிகள், குறிக்கோள்களை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.பிரக்ஸிட் மசோதாவை பார்லி.,யில் நிறைவேற்றுவோம். நாட்டு மக்களை ஒருங்கிணைப்போம். தொழிலாளர் கட்சியை தோற்கடிப்போம்.நாட்டு மக்களின் முழு நம்பிக்கையை பெறுவது தான், தற்போது எங்களின் முதல் பணி. அந்த பணியை துவக்கி விட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X