புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசு நிராகரிப்பு

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 புதுச்சேரி  மாநில அந்தஸ்து மத்திய அரசு நிராகரிப்பு

புதுடில்லி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.புதுச்சேரிக்கு. மாநில அந்துஸ்து வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, புதுச்சேரி சட்டசபையில், பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவற்றை, மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்தது.கடைசியாக, 2017 ஜூலை, 17ல், மாநில அந்தஸ்து வழங்க கோரி, புதுச்சேரி சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





இந்த தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்டது. இதற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர், கிஷன் ரெட்டி அளித்த பதிலில் கூறியதாவது:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. பின், இப்போதுள்ள நிலைமையே தொடர முடிவு செய்யப்பட்டது. அதனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை, நிராகரிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
24-ஜூலை-201913:52:54 IST Report Abuse
s.rajagopalan ஆனாலும் 'நானா'வை இப்படி கிண்டலடிக்க கூடாது. 'அட் லிஸ்ட்' பேடியையாவது தூக்கக்கூடாதா? டி வி காரர்ககளும் அவ்வளவாக கண்டு கொள்ளமாட்டேன் என்கிறார்கள். பிரியங்கா ஒரு நடை பாண்டிக்கு வரலாம். கொஞ்சம் கூட்டம் வரும், ஆறுதலா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
24-ஜூலை-201911:13:58 IST Report Abuse
Anand இன்னும் பாஞ்சு நாள்லே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் - இப்படிக்கு ஏர்போர்ட் நாராயணசாமி
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
24-ஜூலை-201910:43:17 IST Report Abuse
Subburamu Krishnaswamy What happens to Airport Narayanasamy press meet?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X