பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கை இன்று கருத்தறியும் கூட்டம்

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தறியும் கூட்டம் பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று நடக்கிறது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையின் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்க ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மத்திய அரசின் கல்வி கொள்கை குறித்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று முன்தினம் கருத்தறியும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தை நடத்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில் கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளி கல்வி துறையினரின் கருத்தறியும் கூட்டம் சென்னையில் பள்ளி கல்வி தலைமையகம் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று நடக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அரங்கில் கூட்டம் நடக்கிறது. இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
24-ஜூலை-201909:44:18 IST Report Abuse
southindian சூர்யாவுக்கு அழைப்பு அனுப்புங்கள் முதலில் மண்டையில் நல்ல விஷயம் இருந்தால் நல்ல ஆலோசனை வழங்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
24-ஜூலை-201909:39:00 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சூர்யா இங்க போய் தன் கருத்தை சொல்லச்சொல்லுங்க பாப்போம் .....அந்த பக்கமே போக மாட்டார்....ஏன்னா அவர் ஒருபோராளீ
Rate this:
Share this comment
Cancel
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
24-ஜூலை-201905:40:50 IST Report Abuse
Jegan Nicholas இதையும் நடத்த விடமாட்டார்கள் , மக்கள் கருத்துக்கள் வெளியே வந்தால் திராவிட கட்சிகளின் வேஷம் கலைந்து விடுமல்லவா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X